கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனோய் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார். அதேவேளையில் இரட்டையர் பிரிவில் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனோய், டென்மார்க்கின் ஆண்டர்ஸ் அன்டன்சனுடன் மோதினார். 43 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஹெச்.எஸ்.பிரனோய் 14-21, 11-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

ஆடவருக்கான இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடியானது தங்களது முதல் சுற்றில் இந்தோனேஷியாவின் முகம்மது ஷோஹிபுல் ஃபிக்ரி, மவுலானா பாகஸ் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் சாட்விக்-ஷிராக் ஷெட்டி ஜோடி 21-18, 21-19 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *