இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வேகப்பந்து வீரர் பிரவீன் குமார் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் சந்தித்த துயரங்களை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார். குறிப்பாக, 2008 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாட வலுக்கட்டாயப்படுத்தப்பட்டதையும், தனது குடிப் பழக்கம் காரணமாக சீனியர் வீரர்களால் கேவலப்படுத்தப்பட்டதையும் ஆதங்கத்துடன் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

பிரவீன் குமார் 2008 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார். ஆனால், அவர் முதலில் டெல்லி அணிக்காக விளையாட விரும்பினார். ஏனெனில், அவரது சொந்த ஊரான மீரட்டு டெல்லிக்கு அருகில் உள்ளது. பெங்களூரு அவரது ஊரிலிருந்து மிகவும் தூரமாக இருந்தது. மேலும், அவருக்கு ஆங்கிலம் சரியாகத் தெரியாது என்பதால் பெங்களூருவில் விளையாடுவது அவருக்கு சங்கடமாக இருந்தது.

மேலும் படிக்க | முகமது ஷமி: நாங்க தான் பெஸ்ட் பவுலிங் யூனிட்… யாரையும் சம்பவம் செய்வோம்..!

ஆனால், அப்போது இந்திய கிரிக்கெட்டின் அதிகாரமிக்க ஒரு நபர் பிரவீன் குமாரைப் பார்த்து, “நீங்கள் பெங்களூரு அணிக்காக விளையாட வேண்டும்” என்று மிரட்டியிருக்கிறார். பிரவீன் குமார், “நான் டெல்லி அணிக்காக விளையாட விரும்புகிறேன்” என்று அவரிடம் கூறியிருக்கிறார். ஆனால், அந்த நபர் அவரைப் புறக்கணித்துவிட்டு, அவருக்கு பெங்களூரு அணியின் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வைத்தார்.

இது குறித்து பிரவீன் குமார், “முதலில், அது ஒப்பந்தம் என்பதே எனக்குத் தெரியாது. நான் அதை ஒரு ஃபார்ம் என்று நினைத்தேன். பின்னர், அது ஒப்பந்தம் என்பதை அறிந்து கொண்டேன். ஆனால், அப்போது ஏற்கனவே தாமதமாகிவிட்டது. நான் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டேன்” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார். அவரை மிரட்டி கையெழுத்து போட வைத்த நபர் வேறு யாருமல்ல, லலித் மோடி தான். 

லலித் மோடி குறித்து பிரவீன் குமார் பேசும்போது, “பெங்களூரு அணிக்காக விளையாட நான் விரும்பவில்லை என்று லலித் மோடிக்குத் தெரியப்படுத்தினேன். ஆனால், அவர் என்னை அழைத்து, ‘நீங்கள் பெங்களூரு அணிக்காக விளையாடவில்லை என்றால், உங்கள் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துவிடுவேன்’ என்று மிரட்டினார். லலித் மோடி அப்போது ஐபிஎல் மற்றும் பிசிசிஐ ஆகியவற்றின் தலைவராக இருந்தார். அவருக்கு என்னை மிரட்ட அதிகாரம் இருந்தது. எனவே, பெங்களூரு அணிக்காக விளையாட ஒப்புக்கொண்டேன். 

நான் இந்திய அணிக்காக விளையாடியபோது, சில சீனியர் வீரர்கள் என்னை பற்றி தவறாக பரப்பினார்கள். அவர்கள், நான் குடிகாரன் என்று கூறினார்கள். ஆனால், நான் ஒருநாளும் மைதானத்தில் அல்லது ஓய்வறையிலோ குடித்ததில்லை. இது என்னை மிகவும் வருத்தப்படுத்தியது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்திய அணியில் இருந்த அனைவருமே குடித்தார்கள். ஒரு சிலர் மற்றும் குடி மற்றும் மற்ற தவறான பழக்கத்தை கைவிடுமாறு அறிவுறுத்தினார்கள். 

2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் நான் பவுலிங் பயிற்சியாளராக பணியாற்ற விரும்பினேன். ஆனால், எந்த அணியும் என்னை அழைக்கவில்லை. என் சொந்த மாநில அணியான உத்தரப் பிரதேச அணி கூட என்னை அழைக்கவில்லை. இது என்னை மிகவும் துக்கப்படுத்தியது. என் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் பல துன்பங்களைச் சந்தித்தேன். ஆனால், அதில் எனக்கு மிகவும் துன்பத்தைத் தந்தது, என்னைப் பற்றி தவறாக சித்தரித்தவர்கள் சீனியர் வீரர்கள்தான். சிலரின் பொய்யான குற்றச்சாட்டுகள் காரணமாக, என் கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | இந்திய அணிக்கு தொடரும் சோகம்… இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இவர் விளையாடுவது சந்தேகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *