டான்ஸ் ஜோடி டான்ஸ் reloaded நிகழ்ச்சி அப்டேட்: தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்களை தாண்டி சரிகமப, சரிகமப லிட்டில் சேம்ப்ஸ், டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகளுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. 

கோலாகலமாக தொடங்கிய சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது, இதனை தொடர்ந்து ஜீ தமிழ் அடுத்ததாக டான்ஸ் ஜோடி டான்ஸ் reloaded நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை களமிறக்க உள்ளது. 

ஆமாம், வரும் டிசம்பர் 23-ம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. கடந்த சீசனை போலவே இந்த முறையும் ஆர் ஜே விஜய் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பாபா பாஸ்கர், சினேகா மற்றும் சங்கீதா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்க உள்ளனர். இதனால் இந்த நிகழ்ச்சி கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் பக்கா Fun Filled ஷோவாக இருக்கும் என நம்பலாம். 

மேலும் படிக்க | 6 நாள் நடித்து கொடுக்க இத்தனை கோடி சம்பளமா! அசரவைத்த கமலின் சம்பள விவரம்..

சாமானிய கலைஞர்களை சாதனையாளர்களாக மாற்றும் இந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் மெகா ஆடிஷனில் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே சூர்யா அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நடுவர்களுடன் இணைந்து போட்டியாளர்களை தேர்வு செய்ய இருப்பதாக தெரிய வந்துள்ளது. 

 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஆடிஷன் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 24 போட்டியாளர்கள் இந்த மெகா ஆடிஷனில் பங்கேற்க உள்ளனர். இவர்களில் இருந்து தேர்வு செய்யப்படும் 12 திறமையான போட்டியாளர்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சித்தாள் வேலை செய்பவர், ஆட்டோ ட்ரைவர், திருமண விழாக்களில் நடனமாடும் பெண், பரதநாட்டிய டான்சர், மாற்றுத்திறனாளி பலதரப்பட்ட வாழ்க்கை பின்னணியை கொண்ட பலர் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளனர் என்பது அடுத்தடுத்து வெளியான ப்ரோமோ வீடியோக்கள் மூலமாக தெரிய வருகிறது. இதனால் இந்த முறையும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி மூலமாக பல சாமானியர்களின் வாழ்க்கை சாதனை பயணமாக மாறும் என எதிர்பார்க்கலாம். 

இந்த 12 போட்டியாளர்களுடன் இணைந்து நடனமாட போகும் 12 பிரபலங்கள் யார் என்பது குறித்த விவரங்கள் முதல் ரவுண்டான அறிமுக சுற்றின் மூலமாக தெரிய வரும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க | விவாகரத்தானவர்களை கரம் பிடித்த திரை பிரபலங்கள்! லிஸ்டில் இத்தனை பேரா..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *