தற்போது வரை இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மாவின் எதிர்காலம் என்னவென்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ஐ.பி.எல் -லில் மும்பை அணியிலும் அவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். இந்நிலையில், டி20 போட்டிகளில் ரோஹித்தின் எதிர்காலம் குறித்து சஞ்சய் மஞ்சரேக்கர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Rohit Sharma

இந்திய அணியிலும் ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் தொடருவாரா என்பது இன்னும் தெரியவில்லை. இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வருங்காலத்திற்கான அணியைக் கட்டமைக்கும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டிருக்கிறது. அதனால் இந்திய அணியிலும் ரோஹித்தின் முக்கியத்துவம் குறைந்திருக்கிறது. ட்ரேடிங் மூலம் குஜராத் அணியிடமிருந்து வாங்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக்கிவிட்டு ரோஹித்தை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியிருக்கிறது மும்பை அணி. கேப்டனாக இல்லாமல் வெறுமென பேட்டராக மட்டும் மும்பை அணியில் ரோஹித்தின் இடம் என்னவாக இருக்கும் எனும் கேள்வியும் எழுந்திருக்கிறது. இந்நிலையில்தான் சஞ்சய் மஞ்சரேக்கரும் மும்பை அணி மற்றும் ரோஹித் சர்மா குறித்து தன்னுடைய விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியிருப்பதாவது, “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இஷன் கிஷனை அதிக தொகை கொடுத்து மும்பை அணி ஏலத்தில் எடுத்திருந்தது. ஆனால், அப்போதிருந்த அதே நிலையில்தான் இன்னமும் இருக்கிறார். பொல்லார்டின் இடத்தை நிரப்புவதற்கு டிம் டேவிட் இன்னமும் முயற்சிதான் செய்து கொண்டிருக்கிறார்.

Sanjai Manjrekar

சூர்யகுமாரின் ஃபார்மை சார்ந்துதான் அணியே இருக்கிறது. டி20 யில் ஒரு பேட்டராக ரோஹித் சர்மாவை பற்றிக் கேட்டால் கேள்விக்குறிதான் பதில். 50 ஓவர் உலகக்கோப்பையில் நன்றாக ஆடி நம்பிக்கை கொடுத்திருக்கிறார். ஆனால், உங்கள் கையில் 50 ஓவர்கள் இருக்கிறதென தெரியும்போது அப்படி ஆடுவதற்கான சௌகர்யம் கிடைத்துவிடுகிறது. ஆனால், டி20 என்பது அப்படியே வேறுவிதமானது. மேலும், ஓடிஐ போட்டிகளில் பௌலர்களின் அணுகுமுறையும் வேறாகவே இருக்கும்.’ என்றார்.

ரோஹித் சர்மா குறித்த சஞ்சய் மஞ்சரேக்கரின் விமர்சனம் பற்றிய உங்களின் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *