மதுரை: ‘மறுபக்கம்’ என்ற திரைப்பட இயக்கம், ஒவ்வொரு வருடமும் பன்னாட்டு ஆவண மற்றும் குறும்பட விழாவை மதுரையில் நடத்தி வருகிறது. இந்த வருடத்துக்கான விழா, கடந்த 1-ம் தேதி தொடங்கியுள்ளது. வரும் 10-ம் தேதி வரை நடக்கும் இந்த விழா பற்றி ஆவணப்பட இயக்குநர் அமுதன் கூறியதாவது:

வழக்கமாக இந்த விழாவை 5 நாட்கள் நடத்துவோம். இது, 25- வது வருடமாக நடக்கும் விழா என்பதால், பத்து நாட்கள் நடத்துகிறோம். முதல் ஐந்து நாட்கள் ஆவணப்படங்கள் பற்றி 4 கருத்தரங்குகளை நடத்துகிறோம். பழைய ஆவணப்படங்கள், இந்திய ஆவணப்படங்கள், தமிழ் ஆவணப்படங்கள், திரைப்பட அமைப்புகள் பற்றி, இந்தக் கருத்தரங்கு நடக்கிறது. இதில், சொர்ணவேல், அம்ஷன்குமார், ரவிசுப்பிரமணியன், லீனா மணிமேகலை உட்பட பலர் கலந்துகொண்டார்கள். ஆறு நாட்கள், திரையிடல் நடக்கிறது. இதில் 180 இந்திய, பன்னாட்டு ஆவண மற்றும் குறும்படங்களைத் திரையிடுகிறோம்.

இந்தியா முழுவதும் இருந்து 30 இயக்குநர்கள் இதில் பங்கேற்கிறார்கள். 5 பிரிவுகளில் போட்டி அறிவித்துள்ளோம். அதில் வெற்றி பெறும் படங்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் பரிசாகக் கிடைக்கும். இதில் கலந்துகொள்ள 9940642044 / 9444026348 என்ற எண்களில் முன் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அமுதன் கூறினார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *