மும்பை: ‘தூம்’ மற்றும் ‘தூம் 2’ படங்களை இயக்கிய சஞ்சய் காத்வி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56.

2004ஆம் ஆண்டு அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியான படம் ‘தூம்’. இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து 2006ஆம் ஆண்டு ஹ்ரித்திக் ரோஷன் நடித்து வெளியான ‘தூம் 2’ திரைப்படமும் பெரும் வெற்றிபெற்றது. இந்த இரண்டு படங்களை இயக்கியவர் சஞ்சய் காத்வி. இவை தவிர ‘தேரே லியே’, ‘மேரே யார் கி ஷாதி ஹே’ உள்ளிட்ட திரைப்படங்களையும் சஞ்சய் காத்வி இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், 56 வயதாகும் சஞ்சய் காத்வி இன்று (நவ.19) காலை 9.30 மணியளவில் மும்பையில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது மாரடைப்பால் காலமானார். இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய அவரது மகள் சஞ்சினா, அவர் மிகவும் ஆரோக்கியமாக இருந்ததாகவும், அவரது உடலில் எந்த பிரச்சினைகளும் இதற்கு முன்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். சஞ்சய் காத்விக்கு ஜினா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

சஞ்சய் காத்வி மறைவு பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள் அபிஷேக் பச்சன், பிபாஷா பாசு ஆகியோர் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். சஞ்சய் காத்விக்கு இன்னும் மூன்று நாட்களில் (நவ.22) பிறந்தநாள் வரும் நிலையில், அவர் மரணம் அடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *