சென்னை: ரஜினிகாந்தை தன்னுடைய ராகவேந்திரா சுவாமியாக பார்ப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் வெற்றி விழாவில் தெரிவித்துள்ளார்.

‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் வெற்றி விழா நேற்று (நவ.17) சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் கார்த்திக சுப்பராஜ், நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், நவீன் சந்திரா, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோ கலந்து கொண்டு பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினர். இந்த விழாவில் ராகவா லாரன்ஸ் பேசியதாவது:

“இந்த படம் எனக்கு பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறது. என் உள்மனம் சொன்ன மாதிரி இந்தப் படத்தின் நாயகன் கார்த்திக் சுப்பராஜ்தான். இந்தப் படத்துக்கு கடவுளின் ஆசிர்வாதம் நிறைய‌ உள்ளது. சட்டானி கதாபாத்திரத்தில் நடித்த விதுவிற்கு மிகப்பெரிய பாராட்டுகள். நிறைய பேர் இந்த படத்தை பாராட்டி உள்ளனர். என்னுடைய‌ குரு ரஜினிகாந்த் வாழ்த்தியதற்கு மிகவும் நன்றி. ராகவேந்திரா சுவாமியை நேரில் பார்த்ததில்லை. ஆனால் ரஜினிகாந்தை என்னுடைய‌ ராகவேந்திரா சுவாமியாக‌ பார்க்கிறேன். என் அம்மாவின் பெயரில் ஒரு பெரிய கல்யாண மண்டபம் கட்டப் போகிறேன். அதில் என்னுடைய ரசிகர்களின் திருமணத்தை இலவசமாக நடத்தி வைக்க இருக்கிறேன்” இவ்வாறு லாரன்ஸ் பேசினார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *