அண்டார்டிகாவைச் சுற்றியுள்ள கடல்-பனி வரலாற்றில் இதுவரை காணப்படாத அளவிற்கு மிகவும் குறைந்த மட்டத்திற்கு பின்வாங்கியுள்ளது. இது தொடர்பான தரவுகள் செயற்கைக்கோள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பூமியின் வட மற்றும் தென் துருவங்கள் தான் புவி அதிகம் வெப்பமடைவதில் இருந்து நம்மை காப்பாற்றுகிறது. ஆனால் அண்டார்டிகாவில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், புவி வெப்பத்தின் தாக்கத்தில் எதிர்மறை விளைவுகளை உருவாக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

துருவ வல்லுனர்களின் கூற்றுப்படி, இரு துருவங்களிலும் பனி மெலிவது புவியியல் ரீதியாக பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். உலக வெப்பநிலையை ஒழுங்குபடுத்துவதில் அண்டார்டிகாவின் பனிக்கட்டி பெரும் பங்கு வகிப்பதால் இது காலநிலை மாற்றத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். வெள்ளை பனியானது சூரியனின் ஆற்றலை மீண்டும் வளிமண்டலத்தில் பிரதிபலிக்கிறது மற்றும் அதன் அடியில் தண்ணீரை குளிர்விக்கிறது.

அண்டார்டிக் பெருங்கடலின் மேற்பரப்பில் மிதக்கும் பனியின் பரப்பளவு சுமார் 17 மில்லியன் சதுர கிலோ மீட்டருக்கும் குறைவாகவே உள்ளது, அதாவது செப்டம்பர் மாத சராசரியை விட 1.5 மில்லியன் சதுர கி.மீ கடல் பனி குறைந்துள்ளது. முந்தைய குளிர்காலத்தில் ஏற்பட்ட பனிக் குறைவை விட இது குறைவு என்கிறார்கள் விஞ்ஞானிகள்.  தென் துருவப் பகுதியில் பனியின் இந்த விரைவான வீழ்ச்சியின் பின்னணியில் உள்ள காரணிகளை அடையாளம் காண விஞ்ஞானிகள் இப்போது முனைப்பு காட்டி வருகிறார்கள்.

அண்டார்டிகாவில் கடல் பனி எவ்வாறு உருவாகிறது?

அண்டார்டிகாவில் மார்ச் முதல் அக்டோபர் வரையிலான குளிர்காலத்தில் கடல் பனி உருவாகிறது. பின்னர் இது கோடையில் உருகும். இது ஒரு பெரிய அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இதில் பனிப்பாறைகள், நிலத்தில் இருக்கும் பனிக்கட்டிகள் மற்றும் கடற்கரையிலிருந்து விரிந்திருக்கும் பரந்த பனி அடுக்குகள் ஆகியவை அடங்கும். கடல் பனி நிலப் பனிக்கு ஒரு பாதுகாப்பு அரணாக செயல்படுகிறது. இது கடல் வெப்பமடைவதை தடுக்கிறது. பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே அமைப்பின் விஞ்ஞானி டாக்டர். கரோலின் ஹோம்ஸ் கூறுகையில், கோடைகாலத்திற்கு மாறும்போது கடல் பனியின் அளவு குறைவதால் ஏற்படும் விளைவுகள் வெளிப்படையாகத் தெரியலாம். இது பனி உருகுவதை தடுக்க முடியாத பின்னூட்ட சுழற்சிக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கிறார்.

கடல் பனி குறைவதால், சூரிய ஒளியை பிரதிபலிக்காமல் இருண்ட கடல் பகுதிகள் வெளிப்படும். இது தண்ணீரால் வெப்ப ஆற்றலை உறிஞ்சுவதற்கு வழிவகுக்கிறது. இதனால் பனி உருகுவதும் மிகவும் வேகமாகும்.  இதை ‘ஐஸ்-ஆல்பிடோ விளைவு’ என்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்த நிகழ்வு சுற்றுச்சூழலில் வெப்பத்தை கணிசமாக அதிகரிக்கும். இதனால் இது உலகளாவிய வெப்பநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி வெப்ப சமன்பாட்டில் அண்டார்டிகாவின் பங்கை சீர்குலைக்கும்.

கடல் பனி மெலிவதால் என்ன நிகழும்?…  

1990 களில் இருந்து, அண்டார்டிகாவின் நிலப்பரப்பு இழப்பு கடல் மட்டத்தில் 7.2 மிமீ உயர்வுக்கு காரணமா இருந்தது. மிதமான கடல் மட்ட அதிகரிப்பு கூட அபாயகரமான புயல் அலைகளை விளைவித்து, கடலோரங்களில் வாழும் மனிதக் கூட்டத்திற்கு அச்சுறுத்தலாக அமையும். கணிசமான அளவு நிலப் பனி உருகினால், அதன் விளைவுகள் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும். அண்டார்டிகா, தண்ணீரால் சூழப்பட்ட ஒரு தனிமைப்படுத்தப்பட்ட கண்டம். அதற்கென தனித்துவமான வானிலை மற்றும் காலநிலை அமைப்பைக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவின் வளர்ச்சிக்கு சாட்சியாக நிற்கும் பழைய நாடாளுமன்றக் கட்டிடம்… இனி என்னவாகும்?

2016 வரை, அதன் குளிர்கால கடல் பனி விரிவடைந்து வந்தது. ஆனால், மார்ச் 2022 இல் கிழக்கு அண்டார்டிகாவில் ஏற்பட்ட ஒரு தீவிர வெப்ப அலை காரணமாக வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தது. தொடர்ந்து ஏற்படும் வெப்ப நிலை அதிகரிப்பால் இப்பகுதியின் வெப்ப நிலை விரைவில் 50 டிகிரியாக அதிகரிக்கக் கூடும் என அச்சம் தெரிவிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *