இதில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், `சம்பந்தப்பட்ட பெண் தன் கணவர் மற்றும் அவரது குடும்பத்திற்கு எதிராகத் தொடர்ந்து அவமரியாதையை ஏற்படுத்துவது, மற்றும் அடிக்கடி அவர்களுடன் சண்டையிடுவது போன்ற நடவடிக்கைகளை செய்வதால் கணவருக்கு மனவேதனை ஏற்பட்டுள்ளது. மனைவியின் இந்த நடவடிக்கைகள் கொடூரமானவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று நீண்டகால கருத்து வேறுபாடு, கணவருக்கு எதிராக கிரிமினல் புகார் கொடுத்தல் போன்றவை கணவரின் அமைதி மற்றும் தாம்பத்ய உறவை இழக்கச் செய்கிறது. இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ முடியாது என்ற நிலையில், நீண்டகாலமாகப் பிரிந்து வாழும் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்வதன் மூலம் மன அமைதியையும், ஆறுதலையும் பெற்று இருக்கலாம்.

விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்போது இது அடுத்தடுத்து நடக்கக்கூடிய நிகழ்வாகும். அதற்காக கொடுமை செய்ததாக நிரூபிக்கப்பட்ட மனைவியிடமிருந்து கணவர் விவாகரத்துக் கோருவதை தடுக்க முடியாது.

கணவர் கொடுமை செய்தார் என்று சம்பந்தப்பட்ட பெண் எந்த வித குற்றத்தையும் நிரூபிக்கவில்லை. அதோடு வழக்கு நிலுவையில் இருக்கும்போது கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்ற குற்றச்சாட்டையும் மனைவி நிரூபிக்கவில்லை’’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *