இந்தியாவிற்கு எதிராக செயல்படுவதாக கூறி காலிஸ்தான் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கனடா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்த அமைப்பு செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அப்படி கனடாவில் செயல்பட்டு வரும் கேடிஎஃப் (Khalistan Tiger Force) அமைப்பின் மூளையாக செயல்பட்டு வந்தவர் தான் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் எனக் கூறப்படுகிறது. இவர் கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியா பகுதியில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருக்கலாம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.

கனடா மண்ணில் ஒரு கனடா குடிமகனைக் கொல்வதில் வெளிநாட்டு அரசாங்கத்தின் எந்தவொரு தலையீடும் இருப்பதாக உறுதியானால் அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இது நமது இறையாண்மையில் மேற்கொள்ளப்படும் ஏற்றுக்கொள்ள முடியாத மீறலாகும். சுதந்திரமான, திறந்த மற்றும் ஜனநாயக சமூகங்களின் அடிப்படை விதிகளுக்கு முரணானது. இந்த நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம் என்றுள்ளார். இதை பற்றி இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் பேசி இருக்கிறோம். இந்திய பிரதமரிடம் பேசி இருக்கிறோம். விரைவில் இந்த கொலையின் பின்புலத்தை வெளியே கொண்டு வருவோம். இந்தியா இது தொடர்பான விசாரணையில் ஒத்துழைக்க வேண்டும். இதில் உண்மையை கொண்டு வர வேண்டும். நாங்கள் இது பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறோம் என்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கூறியிருந்தார்.

மேலும் , ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்திய RAW தலைவர் பவன்குமார் ராவை வெளியேற்றியது கனடா அரசு. இதனால் இந்தியா-கனடா இடையிலான உறவு பெரிதும் பாதிக்கப்பட்டது என்றே கூறலாம். ஜி 20 மாநாட்டில் பங்கேற்க வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ  நாடு திரும்ப வேண்டிய விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டு ஒரு நாள் தாமதாக அவர் நாடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா… மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்

இந்தநிலையில் காலிஸ்தான் தலைவர் கொலை விவகாரத்தில், இந்திய தூதரை வெளியேற்றியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது இந்தியாவுக்கான கனடா தூதர் உடனே வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: