நாட்டில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி செயல்முறையை உலகம் அங்கீகரித்திருக்கிறது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, ‘நாரி சக்தி வந்தான் ஆதினியம்’ (“Nari Shakti Vandana Adhiniyam’) என்று அழைக்கப்படும். அதிக பெண்கள் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை உறுப்பினர்களாக வருவதை இந்த மசோதா உறுதிசெய்யும். விளையாட்டு முதல் விண்வெளி வரை வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் இந்தியப் பெண்களின் பங்களிப்பை உலகம் கண்டு வருகிறது. நாட்டின் வளர்ச்சிப் பணியில் மேலும் மேலும் பெண்களும் இணைய வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.

மோடி - மல்லிகார்ஜுன கார்கே

மோடி – மல்லிகார்ஜுன கார்கே

எனவே, இந்த மசோதா மாநில மற்றும் தேசிய அளவில் கொள்கை வகுப்பதில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்பதை நோக்கமாகக் கொண்டது. செப்டம்பர் 19 ஒரு வரலாற்று நாள். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தச் சந்தர்ப்பத்தில், சபையின் முதல் நடவடிக்கையாக, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெண்களின் அதிகாரத்துக்கான நுழைவாயில்களைத் திறப்பதற்கான தொடக்கமாகவே இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது” எனப் பேசினார். இந்த மசோதா மீதான விவாதம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *