27 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருக்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வழி செய்யும் வகையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா கடந்த 1996ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆட்சிக் காலத்தில், 81ஆவது சட்ட திருத்த மசோதாவாக தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, மூன்றில் ஒரு பங்கு ஆதரவை பெற வேண்டிய நிலையில், போதிய ஆதரவு பெறாமல் தோல்வி அடைந்தது.

இதனை அடுத்து, கடந்த 1998ஆம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான அரசில் அப்போதைய சட்ட அமைச்சராக இருந்த தம்பிதுரை மசோதாவை அறிமுகம் செய்தார். ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மசோதா தோல்வி அடைந்தது.1999, 2002 மற்றும் 2003 என அடுத்தடுத்த ஆண்டுகளிலும் வாஜ்பாய் அரசு மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முயன்று தோல்வியை சந்தித்தது.பாஜகவுடன் காங்கிரஸ், இடதுசாரிகளின் ஆதரவு இருந்த போதும் மசோதா மூன்றில் ஒரு பங்கு ஆதரவை பெற தவறியது.

இதையும் படிங்க: மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா… மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்

இந்நிலையில், 2008ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு மசோதாவை அறிமுகம் செய்து, நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கும் அனுப்பியது.2009ல் நிலைக்குழு அறிக்கை தாக்கல் செய்ததை அடுத்து, 2010ல் மாநிலங்களவையில் 186க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றாலும், மக்களவையில் நிறைவேறாததால் மசோதா காலாவதியானது.

இந்நிலையில், 13 ஆண்டுகள் கழித்து மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவையில் 15 சதவீதத்துக்கு கீழாகவும், மாநிலங்களவையில் 14 சதவீதத்துக்கும் கீழாகவும் மகளிர் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் 10 சதவீதத்திற்கும் கீழான அளவிலேயே மகளிர் இடம்பெற்றுள்ளனர்.கடந்த சில ஆண்டுகளாக மகளிர் இட ஒதுக்கீடு மீண்டும் பேசு பொருளான நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.27 ஆண்டுகால கிடப்புக்கு முடிவுகட்டி பெண்கள் இடஒதுக்கீட்டில் புதிய வரலாறு எழுதப்படுமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: