ஷாங்காய் நகரைச் சேர்ந்த லி என்ற சுற்றுலாப் பயணி, கடந்த ஆகஸ்ட் 31 தேதி அன்று வடமேற்கு சீனாவில் உள்ள அழகிய ஜின்ஜியாங் பிராந்தியத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அவர் தனக்கு நேர்ந்த வித்தியாசமான அனுபவம் ஒன்றை பகிர்ந்துள்ளதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

லி, டான்ச்சி ஏரியின் கரையில் அமர்ந்திருந்த போது, ஏரியின் மேற்பரப்பில் மீன்கள் தெறிக்கும் சத்தம் கேட்டுள்ளது. அப்போது திடீரென ஏறக்குறைய 600 அடி தூரத்தில், ஒரு புதிரான ஆனால் பயங்கரமான உயிரினம் ஒன்று இருப்பதைப் போல் உணர்ந்துள்ளார் . உடனடியாக லி தனது செல்போன் மூலம் ஏரியின் மேற்பரப்பை வீடியோவாக பதிவு செய்கிறார். மிகவும் அமைதியாக இருந்த ஏரியின் மேற்பரப்பில் திடீரென அலைகள் எழும்புகின்றன. பத்து விநாடிகளுக்கு பிறகு ஏரியின் மேற்பரப்பு அதமைதியாகிறது.

இந்த சலசலப்பை முதலில் மீன்களின் கூட்டம் துள்ளி எழுந்ததால் வந்ததாக நினைத்திருக்கிறார் லி. ஆனால் கூர்ந்து கவனித்தபோது, ​​அது ஒரு உயிரினம் என அறிந்துள்ளார். மேலும் இந்த அறிய உயிரினம் குறித்து அங்கிருந்தவர்களிடம் லீ விவரித்துள்ளார். லீயின் வீடியோ தெளிவாக இல்லாததால் பூங்கா ஊழியர்களால் ஒரு தெளிவான முடிவிற்கு வரமுடியவில்லை. அந்த உயிரினத்தையும் திட்டவட்டமாக அடையாளம் காண முடியவில்லை. இதே போல் முந்தைய காலத்திலும் பல்வேறு சுற்றுலாப் பயணிகள் வித்தியாசமான உயிரினங்களை பார்த்ததாக கூறியுள்ளனர். ஆனால் அவற்றை கண்டுபிடிக்கமுடியவில்லை என்கிறார்கள் பூங்கா ஊழியர்கள்.

டியான்சி ஏரியைச் சுற்றியுள்ள குடியிருப்புகளைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது இது போன்ற குழப்பமான மற்றும் கற்பனை கலந்த தகவல்களை கூறி வருவதாகவும், இது மற்றவர்களின் ஆர்வத்தை தூண்டி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அனைவரின் ஆர்வத்தை தூண்டக்கூடிய ஒரு நீர்வாழ் உயிரினம் உண்மையில் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம், ஆனால் அது இருக்கிறதா இல்லையா என்று சொல்வது கடினம் என்றும் அவர்கள் கூறிகின்றனர். ரெயின்போ ட்ரவுட் உட்பட ஏரியில் அறியப்பட்ட விலங்கினங்கள் எதுவும் 3 அடி நீளத்திற்கு மேல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 2020 இலையுதிர் காலத்தில் சாங்பாய் மலை தேசியப் பூங்காவில் பணிபுரியும் சியாவோ யூ என்பவர், 7 அடி அகலம் கொண்ட ஒரு விசித்திரமான கருப்பு நிற பொருள் டியான்சி ஏரியின் மேற்பரப்பில் மிதப்பதை  பதிவுசெய்த சம்பம் இங்கே நினைவு கூறத்தக்கது. முன்பு இதேபோன்ற காட்சிகளை மீன்பிடி படகுகள் என்று நிராகரித்த யூ, இந்த குறிப்பிட்ட நிகழ்வை விளக்க முடியாமல் திணறியுள்ளார்.

இதையும் படிங்க : மாதத்தில் 5 நாட்கள் இந்த கிராமத்து பெண்கள் ஆடைகள் அணிவதில்லை… வினோத கட்டுப்பாடு கொண்ட இந்திய கிராமம்?

சீனாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையில் அமைந்துள்ள டியான்சி ஏரி, சராசரியாக 670 அடி ஆழத்தைக் கொண்டுள்ளது. அதன் ஆழமான மையப்புள்ளி 1,223 அடிக்கு மேல் உள்ளது. இந்த ஏரியில் லோச் நெஸ் அசுரனை ஒத்த பயங்கர உயிரினம் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. 1962 ஆண்டு முதன் முதலில் வெளியான அசுரன் தொடர்பான தகவல் இன்றுவரை தொடர்கிறது. அன்றிலிருந்து பார்வையாளர்களின் இந்த ஏரி தொடர்பான கற்பனைக் கதைகள் தொடர்ந்து வருகின்றன.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *