சியோல்: தென் கொரியா கடந்த ஆண்டு, தத்தெடுப்புத் துறையில் ஒரு விசாரணையைத் தொடங்கியது, அதைத் தொடர்ந்து பலர் தங்கள் சொந்த அடையாளங்களை தேடும் பிரச்சனைகளை வெளிப்படுத்தத் தொடங்கினார்கள். தத்தெடுப்பு மற்றும் ஒரு தனிநபரின் அடையாளம் தொடர்பான ‘ரிட்டர்ன் டு சியோல்’ என்ற கொரிய திரைப்படம் உலகளாவிய அளவில் பேசுபொருளானது. அதற்குக் காரணம், அந்த திரைப்படத்தின் கருப்பொருள் மட்டுமல்ல. வெளிநாட்டு தத்தெடுப்புகளில் உலகிலேயே தத்துக் கொடுக்கும் நாடுகளில் தென் கொரியா முன்னிலையில் உள்ளது என்பது உண்மையான ஒன்று.  

தத்தெடுப்பு தொடர்பான தென் கொரியாவின் நடவடிக்கை

ஊழல் மற்றும் தவறான நடத்தை பற்றிய பரவலான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, தென் கொரியா கடந்த ஆண்டு அதன் தத்தெடுப்புத் துறையில் தனது முதல் அதிகாரப்பூர்வ அரசாங்க விசாரணையைத் தொடங்கியது. இந்த விசாரணை தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில், பலர் தங்கள் சொந்த அடையாளங்கள் தொடர்பான போராட்டங்களைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளனர்.

கொரிய பிரிவினையின் எதிரொலி 

1953 இல் கொரியப் போர் முடிவடைந்த பிறகு, தோராயமாக 200,000 குழந்தைகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர், அத்லும் முக்கியமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு குழந்தைகள் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு தத்தெடுப்புகளை ஊக்குவிக்க அரசாங்கம் முயற்சிகளை செய்தபோதிலும், தென் கொரிய குடும்பங்கள், குழந்தைகளை தத்தெடுக்க தயங்குகின்றன. கொரியப் போருக்குப் பிந்தைய தசாப்தங்களில், வறுமை, மட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ சேவைகள் மற்றும் நலிவடைந்த மக்கள் நலத்திட்டங்கள் என நாடு சிக்கல்களை எதிர்கொண்டது.

மேலும் படிக்க | பெற்றோர்களுக்கான டிப்ஸ்: குழந்தைகள் பொய் கூறினால் என்ன செய்யலாம்..?

தத்தெடுப்பு அவசியமானது ஏன்?

அந்த சமயத்தில், கைவிடப்பட்ட அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக வெளிநாடுகளில் தத்தெடுப்பவர்களை கண்டுபிடிப்பது தென் கொரியாவிற்கு முக்கியமான விஷயமாக மாறியது.  

தென் கொரியா – தத்தெடுப்பு சிக்கல்கள்
தென்கொரியாவைச் சேர்ந்த பல குழந்தைகளுக்கு வெளிநாட்டில் அக்கறையுள்ள தத்தெடுப்பாளர்கள் கிடைத்ததாகக் கூறப்படும் அதேவேளையில், தென் கொரியாவின் வெளிநாட்டு தத்தெடுப்புகள் ஊக்குவிக்கப்பட்டது பல்வேறு தொழில்முறை சிக்கல்களுக்கு வழிவகுத்தது. அதாவது,  தத்தெடுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடபான ஆவணங்களை திரித்தல் மறைத்தல் என லாப நோக்கில் பல நிறுவனங்கள் செயல்பட்டன.

திருமணமாகாமல் கருவுற்ற பெண்களில் பலர், குழந்தை பிறப்பதற்கு முன்பே, குழந்தைகளை தத்துக்கொடுக்க நிர்பாந்திக்கபப்டுகிறார்கள் என்று நியூயார்க் டைம்ஸ் மற்றும் NPR செய்தி நிறுவனங்களின் செய்திகள் கூறுகின்றன.  

குழந்தை ஏற்றுமதி

தென் கொரியாவின் “குழந்தை ஏற்றுமதி” வணிகத்தின் வேர்களானது, வெளிநாட்டவர் வெறுப்பு மற்றும் கவலைகளின் எதிரொலியாக உள்ளது, அமெரிக்க வீரர்கள் மற்றும் கொரியப் பெண்களுக்குப் பிறந்த குழந்தைகள் கடுமையான தேர்வை எதிர்கொள்கின்றனர்: வெளிநாட்டு தத்தெடுப்பு அல்லது வறுமை மற்றும் அவமானத்தில் வாழ்க்கை என்பது குழந்தைகளுக்கு மனச்சோர்வை அளித்தது.

சீர்திருத்தங்கள் சாத்தியமாகவில்லையா?
தென் கொரியாவில் தத்தெடுப்பு முறைகேடுகளைத் தடுக்க சீர்திருத்தங்கள் ஏற்பட்டுள்ளன. சமீபத்திய தசாப்தங்களில், தென் கொரியா தத்தெடுப்பு நடைமுறைகளை சீர்திருத்த நடவடிக்கை எடுத்துள்ளது, ஒற்றைத் தாய்மார்களுக்கு அதிக ஆதரவை வழங்குகிறது மற்றும் வெளிநாட்டு தத்தெடுப்புகளுக்கு நீதிமன்ற அனுமதி தேவை என்ற விதிகள் கடுமையாக அமலில் இருந்தாலும், பழைய வழக்குகள்   விசாரிக்கப்படாமல் இருந்தன.

மேலும் படிக்க | தனக்கு தானே பிரசவம் பார்த்து குழந்தையை கொன்ற பெண்! சிறிது நேரத்தில் தானும் உயிரிழந்த சோகம்!

பொறுப்புக்கூறலுக்கான உந்துதல், ஒருமுறை தடைசெய்யப்பட்ட இந்த மரபை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் புதிய தலைமுறை வழக்கறிஞர்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் கூட்டு சேர்ந்து தத்தெடுத்தவர்கள் திரும்பியதன் மூலம் வழிநடத்தப்படுகிறது. வெளிநாட்டினரால் தத்தெடுக்கப்பட்ட கொரிய குழந்தைகள், தாங்கள் பிறந்த நாட்டிற்கு வருபவதற்கு ஊக்கமளிக்கும் முயற்சிகளின் ஒருபகுதியாக சியோலில் விருந்தினர் இல்லங்கள் உருவாகியுள்ளன.

தென் கொரியா பொருளாதார முன்னேற்றங்களை கண்டபோதிலும் தொடர்ந்து தத்தெடுப்பை ஊக்குவித்தது, 1980 களில் தாராளமயமாக்கப்பட்ட நாடுகளுக்கிடையேயான தத்தெடுப்புகளில் உச்சக்கட்டத்தை அடைந்தது. 1985 ஆம் ஆண்டில், 8,837 தென் கொரிய குழந்தைகள் வெளிநாடுகளுக்கு தத்துக்கொடுக்கப்பட்டனர், அவர்களில் 6,021 பேர் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டனர் என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

தத்தெடுக்கும் முகவர், குழந்தைகளை தத்தெடுக்க விரும்புபவரிடம் இருந்து $3,000 முதல் $4,000 வரையிலான கட்டணத்தை வசூலித்தது, ஒரு குழந்தைக்கு இந்த தொகை, விமானக் கட்டணம் வசூலிக்கப்பட்டது என தேசிய காப்பகங்களின் உள் அரசாங்க ஆவணங்களை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

“குழந்தை ஏற்றுமதியாளர்” மற்றும் “மெயில்-ஆர்டர் குழந்தைகள்” என சர்வதேச அளவில் லேபிள் செய்யப்பட்ட தென் கொரியாவில் இன்றும் குழந்தை தத்து கொடுப்பது அதிகமாக உள்ளது.  

மேலும் படிக்க | “விஜய்ன்னு சொல்லாதீங்க..தளபதின்னு சொல்லுங்க..” புஸ்ஸி ஆனந்த் அட்வைஸ்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *