இந்நிலையில் இந்திய அணியின் வெற்றி குறித்து பேசிய கவுதம் கம்பீர் தோனியைப் பற்றியும் பாராட்டி பேசியிருக்கிறார். எப்போதும் தோனியைப் பற்றி முரணான கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் கம்பீர் தற்போது தோனியையைப் பாராட்டி பேசியிருப்பது ஆச்சரியமடையச் செய்திருக்கிறது.

தோனி குறித்துப் பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், “ போட்டியின் திசையையே மாற்றக்கூடிய திறமை பெற்றிருந்த முதல் இந்திய விக்கெட் கீப்பர்- பேட்ஸ்மேன் வீரர் தோனிதான்.