ODI உலகக் கோப்பை-2023 அடுத்த மாதம் முதல் விளையாட உள்ளது. இந்த ஐசிசி போட்டிக்கான ஆயத்தப் பணிகளில் 10 அணிகளின் வீரர்களும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், ஒரு பெரிய அப்டேட் வெளிவந்துள்ளது. ஒரு நாள் உலகக் கோப்பை (ODI World Cup-2023) அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு 10 அணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக உள்ள நிலையில், உலகக் கோப்பை அணியில் மாற்றம் செய்துள்ளது பாகிஸ்தான். 

ஆசிய கோப்பை முடிந்த பிறகு, இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் கிரிக்கெட் உலகில் இருந்து ஒரு பெரிய அப்டேட் வெளியானது. பாபர் அசாம் தலைமையிலான அணி வலுவான போட்டியாளராக ஆசிய கோப்பையில் நுழைந்தது, ஆனால் அதன் பயணம் இலங்கையிடம் பெற்ற தோல்வியுடன் முடிந்தது.

சூப்பர்-4 சுற்றிலேயே அந்த அணி வெளியேறி இறுதிச் சுற்றுக்கு கூட செல்ல முடியாமல் போனது. சூப்பர்-4 போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளிடம் இருந்து பாகிஸ்தான் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. உலகக் கோப்பைக்கான அணி இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், ஆனால் தற்போது அணியில் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஆசிய கோப்பை அணியில் மாற்றங்கள் 

அடுத்த மாதம் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கும் உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ஆசியக் கோப்பையில் பங்கேற்காத வீரர்களுக்கு இடம் கிடைக்கலாம் என்பது உறுதியாகத் தெரிகிறது. இதற்கிடையில், லெக் ஸ்பின்னர் அப்ரார் அகமது பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அவர் இன்னும் ஒரு நாள் சர்வதேச அரங்கில் அறிமுகமாகவில்லை.  6 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடியிருக்கிறார்.

மேலும் படிக்க | முகமது சிராஜ்: பிரேமதாசாவில் ராசாவாக ஜொலித்த சிராஜ் – விராட் கோலி ரியாக்ஷன்

செப்டம்பர் மாதத்தில் இந்தியா வரும் பாகிஸ்தான் அணி 

ஒருநாள் உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக பாகிஸ்தான் அணி செப்டம்பர் 27-ம் தேதி இந்தியாவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாபர் அசாம் மற்றும் தலைமைத் தேர்வாளர் இன்சமாம் உல் ஹக் இடையேயான சந்திப்பிற்குப் பிறகு, அப்ரார் அகமதுவை அணியில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சாமா டிவி செய்தி வெளியிட்டுள்ளது.

உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி இன்னும் 1-2 நாட்களில் அறிவிக்கப்படும். ஆசிய கோப்பையில் பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர்களால் சிறப்பாக எதையும் செய்ய முடியவில்லை, குறிப்பாக துணை கேப்டன் ஷதாப் கான் மீதான நம்பிக்கை பொய்த்தது. இதன் காரணமாக சுழற்பந்து வீச்சாளர் ஒருவரை அணியில் வைத்திருக்க அணி நிர்வாகம் விரும்புகிறது.

மேலும் படிக்க | ஆசிய கோப்பை: ரோகித்தின் டைரக்ஷனில் ஹீரோவான சிராஜ் – இந்திய அணி 8வது முறையாக மகுடம்

வெளியேறக்கூடிய நட்சத்திர வீரர்

வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷாவுக்கு காயம் ஏற்பட்டதால், பாகிஸ்தான் அணி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. நசீம் உலகக் கோப்பை அணியில் இருந்தும் வெளியேறலாம். 1992-ம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் அணியால் உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாபர் அசாமிடம் எல்லோருக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

டெஸ்ட் போட்டி அனுபவம் ஓடிஐக்கு உதவுமா?

இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு, சுழற்பந்து வீசும் பெளலர்கள் மீது அதிக பொறுப்பு இருக்கப் போகிறது. அதேசமயம், 25 வயதான லெக் ஸ்பின்னர் அப்ரார் அகமதுவுக்கு வாய்ப்பு கிடைத்தால், அவர் பவுலிங்கில் சாதிக்க முடியும். அப்ரார், 12 லிஸ்ட்-ஏ போட்டிகளில் 26 சராசரியில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பாகிஸ்தான் அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 38 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அப்ரார் .114 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அப்ராரின் சிறந்த பதிவாக இருக்கிறது.

மேலும் படிக்க | ஆசியகோப்பை இறுதிப்போட்டி: ரோகித் சர்மா பேட்டிங் செய்ய வராததன் பின்னணி இதுதானா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: