33 Percent Women’s Reservation: மக்களவை, மாநிலங்களவை, மாநில சட்டப்பேரவை ஆகியவற்றில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான மசோதாவை நிறைவேற்ற மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் 33 சதவீதம் அல்லது மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்க முன்மொழிகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

33 சதவீத ஒதுக்கீட்டிற்குள் எஸ்சி, எஸ்டி மற்றும் ஆங்கிலோ-இந்தியர்களுக்கு துணை இடஒதுக்கீட்டையும் மசோதா முன்மொழிகிறது. ஒவ்வொரு பொதுத் தேர்தலுக்குப் பிறகும் ஒதுக்கப்பட்ட இடங்கள் மாற்றப்பட வேண்டும் என்று வரையறுக்கப்பட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து கட்சிகளின் ஆதரவு

இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவராத நிலையில், மத்திய இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல் அவரது X பக்கத்தில்,”பெண்களுக்கான இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றும் தார்மீக தைரியம் மோடி அரசுக்கு மட்டுமே இருக்கிறது. இது அமைச்சரவையின் ஒப்புதலின் மூலம் நிரூபிக்கப்பட்டது” என குறிப்பிட்டிருந்தார். மேலும், பிரதமர் நரேந்திர மோடிக்கும், அவரது அரசுக்கும் வாழ்த்துகள் எனவும் கூறியிருந்தார். தற்போது இந்த ட்வீட் டெலீட் செய்யப்பட்டுள்ளது.

Tweet

இருப்பினும் இது புதிய மசோதா இல்லை. கடந்த 1996ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மசோதாவாகும். குறிப்பாக, இந்த மசோதாவை தற்போது எதிர்கட்சிகள் உள்பட பல கட்சிகள் ஆதரித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இந்த மசோதா முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் தற்போது வரையில் என்ன நடந்தது என்பதை இதில் காணலாம்.

மேலும் படிக்க | மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாக தகவல்!

கடந்த வந்த பாதை

– 1996ம் ஆண்டு முதல் முறையாக தேவேகவுடா தலைமையிலான அரசில் இம்மசோதா கொண்டுவரப்பட்டது, எனினும் மக்களவையில் தோல்வி அடைந்தது.

– 1998ஆம் ஆண்டில், வாஜ்பாய் அரசில் இம்மசோதா மீண்டும் விவாதிக்கப்பட்டது. 1999, 2002, 2003 ஆண்டுகளிலும் வாஜ்பாய் அரசில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் நிறைவேறவில்லை.

– 2008ஆம் ஆண்டு மன்மோகன் சிங் அரசில் மாநிலங்களவையில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு, நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.

– 2009ஆம் ஆண்டில் நிலைக்குழு அறிக்கை தாக்கல் செய்ய, 2010ஆம் ஆண்டு ஒன்றிய அமைச்சரவை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது.

– 2010ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி மாநிலங்களவையில் 186-1 என்ற வாக்குகளின் அடிப்படையில் இம்மசோதா நிறைவேறியது. எனினும், மக்களவையில் மசோதா எடுத்துக்கொள்ளவில்லை

– 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் இப்போது இம்மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல். 

இது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றி?

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது X பதிவில்,”நாளை மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அரசு கொண்டுவந்தால், அது காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்த அதன் கூட்டணிக் கட்சிகளுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

2010ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி அன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் போது தான் ராஜ்யசபாவில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தன்னுடைய ஆட்சி காலத்தின் 10வது ஆண்டில், மசோதாவுக்கான ஆரவாரம் இல்லாமல் போகும் என்ற நம்பிக்கையில் புதைத்து வைத்திருந்த மசோதாவை தற்போது பாஜக மீண்டும் உயிர்ப்பிக்கிறது.

மாறாக, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த காரிய கமிட்டி கூட்டத்தில் கூட நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்று காங்கிரஸ் குரல் எழுப்பியது. நடப்பு கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என நம்புவோம்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | I.N.D.I.A கூட்டணி தொகுதி பங்கீடு.. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின் விவாதிக்க வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை\

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *