ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 16ஆவதுஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேபாளம், ஆப்கானிஸ்தான் அணிகள் லீக் சுற்றுடனும், பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் சூப்பர் 4 சுற்றுடனும் வெளியேறின.

நடப்புச் சாம்பியனான இலங்கை மற்றும் இந்திய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. ஆசிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான இறுதி ஆட்டம் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்குத் தொடங்குகிறது. கோப்பையை தக்க வைக்கும் முயற்சியில் இலங்கை வீரர்களும், 8ஆவது முறையாக சாம்பியனாகும் முனைப்பில் இந்திய வீரர்களும் ஆயத்தமாகியுள்ளனர்.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்புள்ளதா?

கொழும்புவில் இன்று 90 சதவிகிதம் மழைக்கு வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மழை குறுக்கிட்டால், ரிசர்வ் டேவான திங்களன்று இறுதிப் போட்டி நடத்தப்படும்.

இந்திய அணி வீரர்கள் – ரோஹித் சர்மா(கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல்(விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்

இலங்கை அணி வீரர்கள் – பதும் நிசாங்கா, குசால் பெரேரா, குசால் மெண்டிஸ்(விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரமா, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனகா(கேப்டன்), துனித் வெல்லலகே, துஷான் ஹேமந்த, பிரமோத் மதுஷன், மதீஷா பதிரனா

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *