ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பந்தையும் வீசி, பவுண்டரியை தடுப்பதற்காக பவுலர் சிராஜ் ஓடினார். இதைப் பார்த்த விராட் கோலி, சுப்மன் கில் உள்ளிட்ட வீரர்கள் குலுங்கி சிரித்தனர். இதுதொடர்பான வீடியோ ஒன்று லைக்ஸ்களை குவித்து வருகிறது. இன்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி இந்தியா மிக எளிதாக வென்று 8 ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியபோது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. குறிப்பாக அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்திலும், பூஜியத்திலும் வெளியேறினர். தொடக்க விக்கெட்டை பும்ரா கைப்பற்ற அடுத்த 6 விக்கெட்டுகளை முகமது சிராஜ் அள்ளினார். கடைசி 3 விக்கெட்டுகளை ஹர்திக் பாண்ட்யா எடுத்தார். 15.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி 50 ரன் மட்டுமே எடுத்தது.

இந்த இன்னிங்ஸில் 4 ஆவது ஓவரை சிராஜ் வீசியபோது, 5 ஆவது பந்தை தனஞ்செய டி சில்வா மிட் ஆன் திசையில் அடித்தார். அங்கு ஃபீல்டர்கள் நிறுத்தப்படாததால் அந்த பந்தை தடுப்பதற்காக சிராஜ் ஓடினார். இறுதியில் பந்து பவுண்டரிக்கு சென்றது.

இதைப் பார்த்த விராட் கோலி, சுப்மன் கில் உள்ளிட்ட வீரர்கள் குலுங்கி சிரித்தனர். இதுதொடர்பான வீடியோ ஒன்று லைக்ஸ்களை குவித்து வருகிறது.

இதையும் படிங்க – 8-ஆவது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது இந்தியா.. 6 ஓவர்களில் முடிந்த மேட்ச்!

51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 6.1 ஓவரிலேயே வெற்றி பெற்றது. மொத்தம் இந்த இறுதிப் போட்டி 21.3 ஓவர்களில் முடிவுக்கு வந்தது. மழை வரும் முன்னரே இந்திய அணி ஆட்டத்தை முடித்து விட்டதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டலாக கமென்ட் செய்துள்ளனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *