ரோம்: கடந்த 1943-ம் ஆண்டு ஜெர்மனியின் நாஜிப் படையினர், இத்தாலியை ஆக்கிரமித்தனர். அப்போது அவர்கள், ஏராளமான இத்தாலி மக்களை கொன்று குவித்தனர்.

அந்த சமயத்தில், நாஜிப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் கொல்லப்பட்டதற்காக, இத்தாலி மக்களுக்கு பொது தண்டனை வழங்க நாஜிப் படை முடிவு செய்தது. இத்தாலி மக்களில் 6 பேரை தேர்ந்தெடுத்து அவர்களை பொது இடத்தில் வைத்து நாஜிப் படை தூக்கிலிட்டது. இந்நிகழ்வு நடைபெற்று 80ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், இந்த கொடூர சம்பவத்துக்கு இழப்பீடு வழங்க இத்தாலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கொல்லப்பட்ட 6 பேரின் குடும்பத்தினருக்கு 13 மில்லியன் டாலர் (ரூ.108 கோடி) இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

இழப்பீடு அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவரான மெளரோ பெட்ரார்கோ கூறுகையில், “எங்களால் அந்தத் துயரை கடந்து வரமுடியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளில் துக்கம் அனுசரிக்கிறோம்” என்றார்.

2016-ம் ஆண்டு ஜெர்மனி அரசு, நாஜிப் படையினரால் இத்தாலியில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. நாஜிப் படையினரால் 22,000 இத்தாலிய மக்கள் உயிரிழந்தாதகவும் பல ஆயிரம் இத்தாலி மக்கள் ஜெர்மனியில் அடிமைகளாக பயன்படுத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

நாஜிப் படையினரால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தற்போது இத்தாலி அரசு இழப்பீடு வழங்கி வருகிறது. இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *