டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது என்றே சொல்லலாம். அதுவும் நெட்டிசன்களுக்கு இவரைப் பற்றி நன்றாகவே தெரியும். சில சமயங்களில் அவர் நடந்துகொள்வதைப் பார்த்து, “ஏன் இப்படி குழந்தைத்தனமாக நடந்து கொள்கிறார்” என நமக்கே தோன்றும். வெளியுலகத்திற்கு கோபக்காரராக அறியப்படும் மஸ்க், இன்று பணம், செல்வாக்கு என எல்லாம் இருந்தாலும் தன்னுடைய சிறு வயதில் பல சிரமங்களை சந்தித்துள்ளார்.

சமீபத்தில் வால்டர் ஐசக்சன் என்பவர் எழுதிய எலான் மஸ்க்கின் வாழ்க்கை வரலாறு நூல் வெளியாகியுள்ளது. அதில் எலான் மஸ்க்கைப் பற்றி பலருக்கும் தெரியாத விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.

‘எலான் மஸ்க்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நூலில், அவருடைய இளமைக் கால வாழ்க்கை, ஆசைகள், இலக்குகள், தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் வெளிப்படையாக கூறப்பட்டுள்ளன. தென் ஆப்ரிக்காவில் இருந்த சமயத்தில் பள்ளியில் படிக்கும் போது சக மாணவர்களிடம் இருந்து பல கொடுமைகளை சந்தித்துள்ளார் மஸ்க். வகுப்பில் பிற மாணவர்களுடன் வயது குறைவாக இருந்துள்ளதோடு உயரமும் குறைவாகவும் இருந்துள்ளார். இதற்காகவே மாணவர்கள் சேர்ந்து இவரை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இப்படிதான் ஒருநாள் சக மாணவர்கள் கடுமையாக தாக்கியதில், முகத்திலும் மூக்கிலும் மோசமான காயம் ஏற்பட்டு மருத்துவமணையில் படுத்த படுக்கையானார் . இப்படி தொடர்ந்து மணவர்கள் இவரை தாக்கியதால் பொதுப்பள்ளியிலிருந்து விலகி தனியார் பள்ளியில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார் மஸ்க். பள்ளி வயதில் இவருக்கு ஏற்பட்ட இந்தக் கொடுமை அவரது மனதில் ஆறாத ரணமாக இருந்து வந்துள்ளது. மேலும் மாணவர்கள் தாக்கியதில் இவரது முகத்தை குணப்படுத்தவே பல ஆண்டுகள் ஆனது என்றும் அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எலான் மஸ்க்கிற்கும் அவரது தந்தைக்கும் இடையே பல காலமாக விரிசல் இருந்துள்ளது என்பதும் இந்தப் புத்தகத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. பள்ளியில் சக மாணவர்கள் இவரை கடுமையாக தாக்கிய போதும், நீதான் தவறாக பேசியிருகிறாய் என எலான் மஸ்க்கை குறை கூறி, அந்த மாணவர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார் அவரது தந்தை. இந்த சம்பவத்தையடுத்து தந்தைக்கும் மகனுக்குமான உறவில் கறைபடிய தொடங்கியது.

இதைவிட மோசமான விஷயம் என்னவென்றால் எலான் மஸ்க்கின் தந்தை எரோல், தனது வளர்ப்பு மகளை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தந்தையானார். அன்றிலிருந்து எலானும் அவருடைய தம்பி கிம்பலும் தந்தையிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டனர். மேலும், தனது குடும்பத்தோடு எலான் மஸ்க் தென் ஆப்ரிக்காவில் வசித்த சமயத்தில் எதிர்கொண்ட சவால்களும் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஐஏஎஸ் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்… இன்று ஆண்டுக்கு ரூ.150 கோடி வருமானம்.. யார் இந்த அனுபவ் துவே?

அந்தக் காலகட்டத்தில் தென் ஆப்ரிக்காவில் வன்முறைகளும் கொலைகளும் பெருகியிருந்தது. இதனால் தங்கள் வீட்டை காவல் காக்க ஜெர்மன் ஷெப்பர்ட் நாயொன்றை பாசமாக வளர்த்துள்ளனர். அப்போது எலான் மஸ்க்கிற்கு ஆறு வயது. ஒருநாள் எதிர்பாராவிதமாக அந்த நாய், எலானை தாக்கி, அவரின் பின்புறத்தை கடித்து சிதைத்துவிட்டது. எலான் நாயின் மீது கோபமே கொள்ளவில்லை, இதற்காக அதை தண்டித்துவிடாதீர்கள் என்றே குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். ஆனால் அவர்களோ அதை துப்பாக்கியால் சுட்டு அன்றே கொன்றுவிட்டனர். இப்படி அவரை பாதித்த பல சம்பவங்கள் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *