வடகொரிய முன்னணி நிபுணரான மைக்கேல் மேடன் (Michael Madden), “கிம் ஜாங் உன்னைச் சுற்றிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் முக்கியமானது பாலிஸ்டிக் பெட்டிகள் (ballistic briefcases). கார்பன் ஃபைபரால் உருவாக்கப்பட்ட இவை, குண்டு துளைக்காத தன்மைக்காகப் பெரியளவில் பயன்படுத்தப்படுகின்றன. அது மட்டுமல்லாமல் மின்னணு அடிப்படையிலான ஆயுதங்களிலிருந்தும் பாதுகாக்கின்றன. சந்தேகத்திற்குரிய செயல்பாடுகள் நடப்பதாகக் காவல்துறையினர் கருதினாலோ, துப்பாக்கிச்சூடு நடந்தாலோ இந்தப் பெட்டிகளைக் கையில் வைத்திருக்கும் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக கிம் ஜாங் உன்னைச் சூழ்ந்து பாலிஸ்டிக் பைகளை விரிப்பார்கள். அவர் பாதுகாப்பாக காரில் ஏறும்வரை ஒரு கவசம் போலச் செயல்படுவார்கள்.
கிம் ஜாங் உன்னுடைய தந்தையான கிம் ஜாங் இல் (Kim Jong-il) பின்பற்றிய பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை, இப்போது கிம் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலிருந்து பெறப்பட்ட ஒன்றுதான் பாலிஸ்டிக் பைகள். அவரின் தந்தை, அவசரக்கால மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்காகப் பயன்படுத்தியிருக்கிறார்.

வல்லுநர்கள் இரண்டு நிகழ்ச்சிகளில் இந்தப் பாதுகாப்பு பெட்டிகள் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டறிந்திருக்கின்றனர். அதாவது, வடகொரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தைப் பார்வையிடும்போதும், ஒரு ரிப்பன் வெட்டும் நிகழ்விலும் இந்தச் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வடகொரிய அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பில் இந்த ஆண்டு கிம் ஜாங் உன்னின் பொதுமக்கள் சந்திப்பு பாதியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த குண்டு வெடிப்பில் எத்தனை பேர் காயமடைந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால், அந்த நாட்டின் செய்தித்தாளான The Dong-a Ilbo-ல் வெளியான கட்டுரை ஒன்றில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நாட்டில் நிலவும் மோசமான உணவுப் பஞ்சம் மற்றும் பட்டினியால் ஏற்பட்ட கோபத்தால் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என அந்தச் செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY