புதிதாகத் தனியார் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது… “சல்மான் கானுக்கும், சங்கீதா பிஜ்லானிக்கும் இடையே திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகள் நடந்தன. அவர்களது திருமணத்திற்குத் திருமண அழைப்பிதழ்கள் கூட பிரின்ட் செய்யப்பட்டுவிட்டன.

ஆனால் எனது வீட்டில் சல்மான் கான் இருந்ததை சங்கீதா பிஜ்லானி தெரிந்துகொண்டார். என்னையும் அவர் காதலித்து வந்தார். இது தெரிந்துதான், நடக்கவிருந்த திருமணம் நின்று போனது. சல்மான் கான், சங்கீதா பிஜ்லானிக்கு எப்படித் துரோகம் செய்தாரோ அதைத்தான் எனக்கும் செய்தார். இதுதான் கர்மா. நான் சற்று பெரியவளாக மாறியதும் அதைப் புரிந்துகொண்டேன். சல்மான் கான் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது. பாலிவுட்டில் சாதிக்கவேண்டும் என்ற ஆசையிலும் சல்மான் கானைத் திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசையிலும்தான் நான் மும்பைக்கு வந்தேன்.