உலக மக்கள் மத்தியில் அதிக சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.  ஜி 20 மாநாட்டை வெற்றிகரமாக நிறைவு செய்தது உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.

அமெரிக்காவை மையமாக வைத்து செயல்படும், ‘மார்னிங் கன்சல்ட்’ என்ற வர்த்தக புலனாய்வு நிறுவனம், அமெரிக்கா, இந்தியா, பிரான்சு, ஜெர்மனி உள்ளிட்ட 22 நாடுகளின் ஆட்சியாளர்களின் செயல்பாட்டை ஆய்வு செய்து வருகிறது. இதற்காக, அந்தந்த நாடுகளில் (Nationally representative samples) உள்ள கணிசமான மக்களிடம்  ஆன்லைன் மூலம் கருத்துக் கணிப்பு மேற்கொள்கிறது. அமெரிக்காவில் தோராயமாக 45,000 பேரிடமும், இதர நாடுகளில் 500 – 5000 வரையிலான மக்களிடம் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது.

The latest Morning Consult survey shows that PM @narendramodi Ji’s popularity remains unrivalled among global leaders.

அந்த வகையில், இந்தாண்டுக்கான பட்டியலில் 78 விழுக்காடு மக்களின் ஆதரவுடன் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். சுவசர்லாந்து அதிபர் 64 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், மெக்சிகோ அதிபர் 61 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். மோடி அரசின் கொள்கை மற்றும் திட்டங்களுக்கு இந்திய மக்களின் ஆதரவு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. அதேபோன்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து அதிபர் ரிஷி சுனக் ஆகியோரின் கொள்கை முடிவுகளில் அந்நாட்டு மக்கள் திருப்தி கொள்ளவில்லை என்று தெரிய வந்துளளது.

உலகத் தலைவர்களிடையே பிரதமர் மோடியின் செல்வாக்கு ஈடு இணையற்றதாக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். இதுகுறித்து, அவர் தனது சமூக ஊடக பக்கத்தில், “வெளியுறவுக் கொள்கையில் பிரதமர் மோடியின் கோட்பாட்டின் வெற்றிக்கு ஒரு சான்றாக மட்டுமல்லாமல், வறுமையில் இருந்து லட்சக்கணக்கான மக்களை மீட்டெடுக்கும் அசாத்திய சாதனைகளுக்கு இது சான்று எனவும் தெரிவித்துள்ளார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *