ஹீரோயின் ஆன ஷாலி நிவேகாஸ்

15 ஏப், 2023 – 14:28 IST

எழுத்தின் அளவு:


Actress-shali-nivekas-turn-as-heroine

அழகி போட்டிகளில் டைட்டில் வென்ற ஷாலி நிவேகாஸ் சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தார். பின்னர் விளம்பர படங்களிலும், குறும்படங்களிலும் நடித்தவர் சமீபத்தில வெளிவந்த ‘செங்களம்’ வெப் தொடரில், ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலாவை நினைவுபடுத்தும் நாச்சியார் என்ற கேரக்டரில் நடித்த பிரபலமானார். தற்போது அவர் ‘பேரன்பும் பெருங்கோபமும்’ என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் 3 கால கட்ட கதையில் 3 விதமான தோற்றத்தில் நடிக்கிறார்.

துரை வீரசக்தி தயாரிப்பில், பாலுமகேந்திரா உதவியாளர் சிவபிரகாஷ் இயக்கி வரும் இந்த படத்தில் நாயகனாக புதுமுகம் விஜித் நடிக்கிறார். மைம் கோபி, அருள்தாஸ், சுபத்ரா, விஜய் டிவி தீபா, சாய் வினோத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இளையராஜா இசை அமைக்கிறார், தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் பற்றி இயக்குனர் சிவபிரகாஷ் கூறியதாவது: சமூகத்தின் ஏற்றதாழ்வை, புரையோடி நிற்கும் முக்கிய பிரச்சனையை அழுத்தமாக சொல்லும் படமாக உருவாகி வருகிறது. செல்வத்திலும் கல்வியிலும் உயர்ந்தாலும், ஒருவன் எந்த இடத்தில் இருந்தாலும், மனதில் மேன்மையான எண்ணங்கள் கொண்டவனே உண்மையான சமத்துவ மனிதன். வெறும் பட்டங்களால் தன் பெயரை அலங்கரிப்பதை விட, நல்ல சிந்தனைகளால் மனதை அலங்கரிப்பவனே மேன்மையானவன். இப்படி சிந்தனை உள்ள ஒரு சாமானியனை பற்றிய கதைதான் இந்த படம். 1998, 2000, 2022 என மூன்று காலகட்டங்களில் கதை நடக்கிறது. என்றார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *