காரின் பின்னாடியே ஓடி வந்த ரசிகை : மஞ்சு வாரியர் அளித்த வாக்குறுதி

14 ஏப், 2023 – 13:47 IST

எழுத்தின் அளவு:


A-fan-followed-Manju-warrier-car

மலையாள திரையுலகில் புதுப்புது நடிகைகள் அறிமுகமானாலும் இப்போதும் நடிகை மஞ்சு வாரியருக்கு மற்ற எல்லோரையும் விட அதிக அளவு ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் எரூர் என்கிற ஊரில் சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் மஞ்சு வாரியர். அவரைக் காண ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். மேடையில் இருந்தபடியே அவர்களுடன் பிரம்மாண்ட செல்பி எடுத்துக்கொண்ட மஞ்சு வாரியர் அங்கிருந்து காரில் கிளம்பினார். போக்குவரத்து நெரிசல் மிகுந்த அந்த சாலையில் அவரது கார் மெதுவாக சென்றபோது காரை பின் தொடர்ந்து ஒரு இளம் பெண் ஓடி வருவதை பார்த்த மஞ்சு வாரியர் ஒரு ரசிகை என்கிற நிலையில் அவருக்கு ஒரு ஹாய் சொன்னார்.

ஆனாலும், தொடர்ந்து அந்த பெண் திரும்பவும் அந்த காரை துரத்தியபடி ஓடி வந்தார். நெரிசல் அதிகமாக இருந்தாலும் மீண்டும் காரை நிறுத்திய மஞ்சு வாரியரிடம், இரண்டு நிமிடம் ஒதுக்க முடியுமா என்று அந்த பெண் கேட்டுள்ளார். இருந்தாலும் காரை அங்கே சில நொடிகளுக்கு மேல் நிறுத்த வழியில்லாததால் அந்த பெண்ணிடம் காரில் இருந்தபடியே விபரம் கேட்க, தனது தாய் மஞ்சுவாரியரின் தீவிர ரசிகை என்றும் இன்று அவர் பிறந்த நாள் என்பதால் தொலைபேசியில் மஞ்சு வாரியர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னால் மிகவும் மகிழ்ச்சி அடைவார் என்றும் அந்த இளம்பெண் கூறியுள்ளார்.

உடனே மஞ்சு வாரியர் தன் காரின் பின்னே தொடர்ந்து வந்து கொண்டிருந்த தனது உதவியாளரிடம் அந்த பெண்ணின் மொபைல் நம்பரை கொடுக்குமாறும் தான் வீட்டிற்கு சென்ற பின்னர் அவரை போனில் அழைத்து அவரது தாய்க்கு வாழ்த்துக்கள் கூறுவதாகவும் உறுதியளித்துவிட்டு கிளம்பினார். இதனால் மகிழ்ச்சியடைந்த அந்த ரசிகை மஞ்சு வாரியாரின் இந்த அன்பை அங்கிருந்த மீடியாக்களிடம் பகிர்ந்து கொண்டார்

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *