சேப்பாக்கத்தில் ஸ்பின்னர்களுக்கு எதிராக பேட் ஏந்துவதும் கொலைக்களத்தில் வேண்டி விரும்பி தலையை வைப்பதும் ஏறக்குறைய ஒன்றுதான். அதிலும் டர்னோடு விளையாடி ஸ்பின்னோடு உறவாடும் இரு அணிகளின் தலைசிறந்த ஸ்பின்னர்களுமே மோதலுக்கு மேலும் செறிவூட்டுபவர்கள். ஆகவே பல திருப்பங்களை சிஎஸ்கே – ராஜஸ்தான் இடையிலான போட்டி சந்திக்கும் என்பது பலருமே யூகித்த ஒன்றாகவே இருந்தது.

டாஸ்கூட 200-வது முறையாக சிஎஸ்கேவிற்குத் தலைமையேற்ற தோனிக்கே வாழ்த்தி வாக்களித்தது. கிட்டத்தட்ட 60 சதவிகிதம் போட்டிகளில் அணியை வெல்ல வைத்திருக்கும் தோனியின் ஹோம் ரெக்கார்ட் 72 சதவிகிதம். ஒவ்வொரு முறை அவர் களத்தில் காலடி வைக்கும் போதும் பல சாதனைகள் உடைக்கவும் படைக்கவும் படுகின்றன. ஒவ்வொரு முறையும் அது அனுப்பும் சமிக்ஞை அணிக்குள் அவர் ஏற்படுத்தியுள்ள தாக்கத்திற்கான அளவீட்டைத்தான்.

இரண்டாவது பாதியில் குறுக்கிடும் பனிப்பொழிவு தோனியை சேஸிங்கைத் தேர்ந்தெடுக்க வைத்தது. லக்னோவிற்கு எதிரான சிறந்த செயல்பாட்டுக்குப் பிறகும் தீக்ஷனாவை உள்ளே கொண்டுவர வேண்டுமென்பதற்காக சாண்ட்னரை வெளியே அமர்த்திய கடினமான சூழல் சிஎஸ்கேவிற்கு. ராஜஸ்தானின் பக்கமோ படிக்கல் மறுபடி சேர்க்கப்பட்டிருந்தார். போல்ட் இல்லாதது சிஎஸ்கேவின் டாப் ஆர்டரின் வயிற்றில் சற்றே பாலை வார்த்திருந்தது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *