சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் வரிசையில் முக்கியமான மாற்றம் ஒன்றை செய்ய வேண்டும் என்று கேப்டன் தோனியை கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். ஐபிஎல் நடப்பு சீசனில் சென்னை அணியின் கேப்டன் தோனி நல்ல பேட்டிங் ஃபார்மில் உள்ளார். இதனால் அணியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னை அணியின் பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தோனியிடம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

சென்னை அணியின் பேட்டிங் வரிசையில் தோனி முன்னரே களத்தில் இறங்க வேண்டும். இதனை தோனி செய்வார் என்று நம்புகிறேன். இதை அவர் செய்தால் அவர் கூடுதலாக 2, 3 ஓவர்களை விளையாடுவார். இதனால் அவரால் அதிக ரன்களை குவிக்க முடியும். மிகப்பெரிய ரன்களை சர்வ சாதாரணமாக எடுக்கும் அளவுக்கு தோனி திறமை மிக்கவர். இந்திய கிரிக்கெட் அணியின் லெஜெண்டாக தோனி இருக்கிறார். சென்னை அணியின் கேப்டனாக தனது 200 ஆவது போட்டியில் தோனி பங்கேற்கிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெறும். அது தோனியின் 200 ஆவது கேப்டன்ஷிப் போட்டிக்கு பரிசாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை அணியின் கேப்டன் தோனியின் தலைமையின் கீழ் சென்னை அணி 2010, 2011, 2018 மற்றும் 2021 ஆகிய சீசன்களில் ஐபிஎல் கோப்பையை வென்றது. இன்று ராஜஸ்தான் அணிக்கு எதிராக தோனி விளையாடி வரும் போட்டி, அவரது தலைமையின் கீழ் சென்னை அணி பங்கேற்கும் 200 ஆவது போட்டியாகும். ஒட்டுமொத்தமாக ஐபிஎல் தொடரில் 213 போட்டிகளில் தோனி கேப்டனாக பொறுப்பில் இருந்துள்ளார். இதில் 125 போட்டிகள் வெற்றியும் 87 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. ஒரு போட்டியில் முடிவு ஏதும் அறிவிக்கப்படவில்லை.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *