தந்தையை இழந்து வாடும் அஜித்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்

24 மார், 2023 – 14:15 IST

எழுத்தின் அளவு:


Vijay-went-to-Ajith-house-and-says-console-who-is-mourning-the-loss-of-his-father

நடிகர் அஜித்தின் தந்தை தந்தை சுப்பிரமணியம் சென்னையில் காலமானார். சில ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். 85 வயதான அவர் இன்று அதிகாலை தூக்கத்திலேயே இறந்தார். ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் தங்களுடைய ஆறுதலை தெரிவித்து வருகின்றனர். உதயநிதி, ஏஎல் விஜய், மிர்ச்சி சிவா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

சுப்ரமணியமின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு வாகனம் மூலம் கொண்டு வரப்பட்டது. அங்கு அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் அஜித் உள்ளிட்ட குடும்பத்தினர் பங்கேற்றனர். இந்நிலையில் அஜித்தின் தந்தை மறைவையொட்டி நடிகர் விஜய், சென்னையில் உள்ள அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *