சென்னை:

நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிவதாக அறிவித்த நிலையில் இதை பற்றி மிக கடுமையான விமர்சனங்களை, கட்டுக்கதைகளை சில யூ டியூப் பக்கங்கள் வெளியிட்டு வருகின்றன. இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடனான 18 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்வதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். நாங்கள் பிரிந்து வாழ் முடிவு செய்துவிட்டோம்.. எங்களுக்கான பிரைவசியை மக்கள் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு இருவரும் பிரிவதாக அறிவித்துள்ளனர். இணையம் முழுக்க தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் இந்த முடிவு பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் பிரிவு காரணம்

தனுஷ் – ஐஸ்வர்யா பிரிந்தது தொடர்பாக இதுவரை இணையம் முழுக்க பல ஆயிரம் கட்டுரைகள் வெளியாகிவிட்டன. இவர்களின் பிரிவுக்கு என்ன காரணம் என்று கூறி நிறைய கட்டுரைகள் வெளியாகிவிட்டன. சில கட்டுரைகள் நேரடியாக தனுஷ் தரப்பிற்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்து எழுதப்பட்ட புலனாய்வு கட்டுரைகள். அதில் தவறு இல்லை. ஆனால் சில கட்டுரையில் “கண்ணை மூடிக்கிட்டு அடித்து விடு” ரக கிளிக் பைட் ரக கட்டுரைகள்தான்.. இப்படி இணையம் முழுக்க ஐஸ்வர்யா – தனுஷ் பிரிவு தொடர்பான கட்டுரைகள் நிரம்பி கிடக்கின்றன.

எல்லை மீறியது

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தனுஷ் விவகாரத்தை மிக மோசமாக அணுகியவர்கள் என்று பார்த்தால் அது இந்த யூ டியூப் சேனல்கள்தான். யூ டியூபில் இருக்கும் சில குட்டி குட்டி சேனல்கள் தனுஷின் இந்த முடிவை மிக மிக அநாகரீகமான முறையில் கையாண்டு இருக்கின்றன. குட்டி குட்டியாக சினிமா காசிப் எழுதும் சில சேனல்கள்தான் இந்த அத்துமீறல்களை நிகழ்த்தி இருக்கின்றன. இந்த விவகாரத்து என்று இல்லாமல் அதற்கு முன்பில் இருந்தே தனுஷ் என்றால் யூ டியூப் சேனல்கள் சிலவற்றுக்கு ஈஸி டார்கெட்தான்.

 

தனுஷ் மீதான வன்மம்

தனுஷுக்கு இந்த நடிகையுடன் தொடர்பு, அந்த நடிகையுடன் தொடர்பு, பாலியல் உறவுக்கு அழைத்த தனுஷ் என்றெல்லாம், இதை விட மோசமான தலைப்புகளை எல்லாம் thumpல் வைத்து பல வீடியோக்கள் தனுஷை பற்றி வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் கவனிக்க வேண்டிய விஷயம் தனுஷ் விவாகரத்து செய்யும் முன்பே அவர் மீது இப்படி பொய்யான விமர்சனங்கள் பல வைக்கப்பட்டு இருக்கின்றன. தனுஷ் விவாகரத்துக்கு முன்னே அவருக்கு எதிராக ஆயிரக்கணக்கில் இப்படி வீடியோக்கள் பதிவேற்றப்பட்டு இருக்கின்றன.

தனுஷ் வதந்தி

முக்கியமாக எந்த நடிகை தனது கணவனை பிரிந்தாலும் தனுஷ்தான் அதற்கு காரணம் என்பது போல பொய்யான ஒரு வதந்தியை பரப்பி தனுஷின் பர்சனல் விஷயங்களில் பல யூ டியூப் சேனல்கள் எட்டிப்பார்த்தன. அதிலும் சில சேனல்கள் கொஞ்சம் எல்லை மீறி போய் தனுஷின் புகைப்படத்தை சில நடிகைகளின் புகைப்படத்தோடு இணைந்து thump வைத்து சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதுவும் கூட ஒரு வகையில் தனுஷின் குடும்ப வாழ்க்கையை பாதித்து இருக்கலாம்.

 

எண்ணெய் ஊற்றிய வதந்திகள்

தனுஷின் விவாகரத்திற்கு முன் யூ டியூப் சேனல்கள் பல இப்படி பரப்பிய வதந்திகளும் கூட அவரின் திருமன வாழ்க்கையை பாதித்து இருக்க வாய்ப்புகள் உள்ளன. சமீபத்தில்தான் வழக்கு ஒன்றில், யூ டியூப் சேனலில் எதை வேண்டுமானாலும் வெளியிடலாம் என்ற நிலை இருக்கிறது. இதில் அவதூறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது. கீழ்த்தரமான விமர்சனங்களை வைக்கும் போக்கு அதிகரித்துள்ளது என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை விமர்சனம் செய்தது.

 

யூ டியூப் அனுராக் தாக்கூர்

தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் கூட இரண்டு நாட்களுக்கு முன் யூ டியூப் சேனல்களின் செயல்பாடுகளை விமர்சனம் செய்து இருந்தார். பொய்யான தகவல்களைப் பரப்பும், தவறான செய்திகளை வெளியிடும் யூ டியூப் சேனல்கள் கண்காணிக்கப்பட்டு அவற்றை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டது நினைவு கூறத்தக்கது. தனுஷின் திருமண முறிவு என்பது மிகவும் சென்சிடிவ் விஷயம்.

நடவடிக்கை தேவை

தனுஷ்.. ஐஸ்வர்யா.. அவர்களின் குடும்பம் தவிர்த்து அவர்களின் குழந்தைகளும் இது போன்ற வீடியோக்களை பார்க்கும் நிலை வரலாம். அவர்கள் இருவருமே 10 வயது தாண்டியவர்கள்.. இணையம் பார்க்க கூடியவர்கள். அவர்களும் இது போன்ற வீடியோக்களை கடந்து வர வேண்டிய சூழல் ஏற்படும் போது அதை அவர்கள் எதிர்கொள்ள கடினமாக இருக்கும். மிக சாதாரணமாக அணுக வேண்டிய ஒரு விவாகரத்து செய்தியாக சில யூ டியூப் சேனல்கள் கிரைம் கேஸ் போல அணுகி உள்ளது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை சந்தித்துள்ளன.. யூ டியூபர்ஸ் “சிலர்” இன்னும் கொஞ்சம் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் இணையம் “டாக்சிக்” குறைவாக இருக்கும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *