சென்னை:

ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது என்ற அறிவுரையுடன் நடிகர் ரஜினிகாந்த் தனது பொங்கல் வாழ்த்தை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பொங்கல் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ள அவர், கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார். ரஜினிகாந்தின் பொங்கல் வாழ்த்து விவரம் பின்வருமாறு;

ஆபத்தான சூழல்

”ஒரு கஷ்டமான, ஆபத்தான சூழ்நிலையிலே வாழ்ந்திட்டிருக்கோம். இந்த கொரோனா நாளுக்கு நாள் அதிகமாகிட்டிருக்கு. இதுலேருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள எல்லா கட்டுப்பாடுகளையும், எல்லா நியமங்களையும் கண்டிப்பா கடைபிடிங்க. ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது. அனைவருக்கும் என்ண்டைய பொங்கல் வாழ்த்துகள்.” என ரஜினி பதிவிட்டிருக்கிறார்.

அறிவுறை கலந்து

பொங்கல் வாழ்த்துச் செய்தியில் மக்களுக்கு தேவையான அறிவுறையையும் ரஜினி வழங்கியிருப்பது கவனிக்கத்தக்கது. கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், இன்னும் அதைப்பற்றி சரியான புரிதலின்றி பெரும்பாலானோர் இருப்பதால் ரஜினிகாந்த் தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியுடன் அட்வைஸையும் கொடுத்திருப்பதாக கருதப்படுகிறது. டிவிட்டர் மற்றும் ஹூட் செயலியில் அவர் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்தை 10 நிமிடத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ரீ டிவிட் செய்தனர்.

அரசு கட்டுப்பாடுகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், தேவையற்ற வெளிப்பயணங்களை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை தரப்பில் என்னதான் அறுவுரை செய்யப்பட்டாலும், அதனை முழுமையாக மக்கள் பின்பற்றுவதில்லை. இந்தச் சூழலில் நடிகர் ரஜினிகாந்திடம் இருந்து வந்துள்ள இந்த அறிவுரை பெரியளவில் மக்கள் மத்தியில் சென்று சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கல் வாழ்த்து

இதனிடையே ரஜினிகாந்த் தனது வாழ்த்துச் செய்தியில் பொங்கல் வாழ்த்து மட்டுமே குறிப்பிடிருக்கிறார். தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில் ரஜினி தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக ஏற்க மறுத்திருப்பது அவரது வாழ்த்துச் செய்தியின் மூலம் தெரிய வருகிறது. சித்திரை முதல் நாளையே தமிழ் புத்தாண்டாக ரஜினி கருதுகிறார் என்பது அவரது டிவிட்டர் பதிவு மூலம் உணர முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *