சென்னை:

கேளம்பாக்கம் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் ஷா இன் ஷா (26), நேற்று முன்தினம் மாலை அவரது வீட்டில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலறிந்த கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்து சடலத்தை மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். அதில், ஷா இன் ஷாவின் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதும், கழுத்தில் டவலால் இறுக்கி கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கண்ணகி நகரை சேர்ந்த சரோஜா, பிரபல கஞ்சா வியாபாரி.  இவரது ஆதரவில் வளர்ந்து வந்த ஷா இன் ஷா முதலில் விஜயகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவரது இறப்புக்கு பிறகு வேறொருவரை திருமணம் செய்துகொண்டார். இவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரும் பிரிந்துவிட்டார். இரண்டு கணவர் மூலம் தலா ஒரு குழந்தை பிறந்தது.  ஷா இன் ஷா 2 குழந்தைகளுடன் கேளம்பாக்கத்திற்கு வந்து வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

அப்போது, அவருக்கு பாலவாக்கத்தைச் சேர்ந்த விஜய் என்பவருடன் மீண்டும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் மர்மமான முறையில் செங்கல்பட்டு பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு விஜயின் தம்பி கார்த்திக்(19) அடிக்கடி ஷா இன் ஷாவின் வீட்டிற்கு வந்து அவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்தது. சகோதரரின் மரணத்திற்கு பழிக்கு பழி வாங்க ஷா இன்ஷாவை கார்த்திக் கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா இருக்குமா என்ற கோணத்தில்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கார்த்திக்கின் தந்தையிடம் நடத்திய விசாரணையில் அவர் 15 நாட்களாக வீட்டிற்கே வரவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து கார்த்திக்கின் நண்பர்கள் 4 பேரை போலீசார் பிடித்தனர். கொலை நடந்த 2ம் தேதி மாலை 6.30 மணி வரை கார்த்திக்கின் செல்போன் சிக்னல் கேளம்பாக்கம் பகுதியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும்,  கார்த்திக்கை பிடிக்க  2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *