பரமக்குடி;
பரமக்குடி அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தேடப்பட்டு வந்த கணித ஆசிரியர் ராமநாதபுரம் மகிளா நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பெருமாள் கோவில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக இரண்டு ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவான மற்றொரு ஆசிரியரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ஆசிரியர் ஆல்பர்ட் வளவன் பாபு இராமநாதபுரம் மகிளா நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கடந்த ஏழாம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் குழந்தை பாதுகாப்பு மையம் சார்பாக பரமக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருமாள் கோவில் அரசு உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவிகள் சிலர் கணித ஆசிரியரான பரமக்குடி மணி நகரில் வசித்து வரும் ஆல்பர்ட் வளவன் பாபு மற்றும் சமூக அறிவியல் ஆசிரியரான விருதுநகர் மாவட்டம் நரி குடியைச் சேர்ந்த ராமராஜ் என்பவரும் வகுப்பறையில் பாலியல் தொந்தரவு செய்யும் நோக்கத்தோடு இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும், தொடுவதாகவும் மாணவிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குழுவுடன் வந்து மேற்படி பள்ளியில் நேரடியாக விசாரணை செய்ததில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதி செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து சமூக அறிவியல் ஆசிரியரான ராமராஜனை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான கணித ஆசிரியரான ஆல்பர்ட் வளவன் பாபுவை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஆசிரியர் ஆல்பர்ட் வல்லவன் பாபு, இராமநாதபுரம் மகிளா நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து ஒரு பரமக்குடி சிறையில் அடைக்கப்பட்டார்
+ There are no comments
Add yours