சேலம்;
ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்…
நாடு முழுவதும் இன்று புத்தாண்டு பிறப்பை கொண்டாடி வருகின்றனர் மேலும் தமிழகத்தில் உள்ள கோயில்களில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக நள்ளிரவில் கோயில்கள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு காலை முதலே ராஜகணபதி சிறப்பு அபிஷேகம் பூஜைகள் செய்யப்பட்டது அதனைத்தொடர்ந்து முத்தங்கி அலங்காரத்தில் ராஜகணபதி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது இதில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோயிலில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது பக்தர்கள் நீண்ட வரிசையில் தங்களது குடும்பத்துடன் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்
இதேபோல சேலம் மாநகரில் உள்ள எல்லைப்பிடாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு திருக்கோயில்களில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
+ There are no comments
Add yours