ஆந்திரா;

சித்தூரை நோக்கி வந்து கொண்டிருந்த  பால் வேன் ஒன்றை சோதனை செய்ய முயன்றபோது வேனியிலிருந்து மூன்று பேர் இறங்கி ஓட்டம் பிடித்தனர். உடனடியாக போலீசார் வேனில் சோதனை செய்தபோது அட்டைப் பெட்டிகளில் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு 20 லட்சம் ரூபாய் ஆகும்.

ஆந்திர மாநிலம் சித்தூரில் பால் வேனில் மது கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார், 20 லட்சம் மதிப்பிலான 10,000 மதுபாட்டில்கள்,கடத்தலுக்கு பயன்படுத்திய பால் வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் – வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சித்தூர் நகர போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சித்தூரை நோக்கி வந்து கொண்டிருந்த  பால் வேன் ஒன்றை சோதனை செய்ய முயன்றபோது வேனியிலிருந்து மூன்று பேர் இறங்கி ஓட்டம் பிடித்தனர்.

உடனடியாக போலீசார் வேனில் சோதனை மேற்கொண்டனர் அப்போது அதில் அட்டைப் பெட்டிகளில் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. வேனில் இருந்த இரண்டு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் அவர்கள் சித்தூரை சேர்ந்த கார்த்திக் மற்றும் சுரேஷ் என்பது தெரியவந்தது. அவர்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள மதுபான கடைகளில் மொத்தமாக மது பாட்டில்களை கொள்முதல் செய்து அங்கிருந்து கடத்திவந்து ஆந்திர மாநிலத்தில் விற்பனை செய்வது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் சட்டத்திற்கு புறம்பான வியாபாரத்தில் முக்கிய நபராக உமாசங்கர் ரெட்டி, பிரகாஷ், பிரதாப், வேணு ஆகிய நான்கு பேர் இருப்பது தெரியவந்தது.இதனையடுத்து அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கைப்பற்றப்பட்ட 20 லட்சம் மதிப்பிலான 10,000 மதுபாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய பால் வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார்  கார்த்திக் மற்றும் சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *