சென்னை;
நடிகர் வடிவேலு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புலிகேசி பட பிரச்சனையால் சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த நடிகர் வடிவேலு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். அவரது முதல் படமாக நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உருவாகிறது. இதை இயக்குனர் சுராஜ் இயக்க, லைகா நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.
இந்நிலையில் பாடல் தொடர்பாக வடிவேலு, சுராஜ் உள்ளிட்டோர் லண்டன் சென்றிருந்தனர். அந்த பணி முடிந்து சென்னை திரும்பிய நிலையில் வடிவேலுவிற்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார் வடிவேலு.
+ There are no comments
Add yours