கர்நாடக;

கர்நாடக காவல்துறையில் பணியாற்றதிருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் எனஅம்மாநில காவல்துறை தெரிவித்திருக்கிறது.,

கர்நாடக குடிமை பணிக்களுக்கான விதிகளின்(1977) திருத்தத்தின் படி அரசு வேலையில் 1 சதவீதம் திருநங்கைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதால் முதல் முறையாக திருநங்கைகள் மாநில காவல்துறையின் பல்வேறு பணிகளுக்குபணியாற்ற விண்ணப்பிக்கலாம் என்கிறஅறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

இதற்கு விண்ணப்பிக்கமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) விதிகள் 2020-ன் படி, திருநங்கைகள் மாவட்ட ஆட்சியரிடம் உறுதிச்சான்றிதழைப் பெற்றிருக்கவேண்டும்.

மேலும் , சமீபத்திய பணிவாய்ப்பு அறிவிப்பின் படி , கூடுதல் காவல்துறை இயக்குநர் பணிக்கான 70 பணியிடங்களில் 5 திருநங்கைகளை பணியில் அமர்த்த தேர்வாணையம் முடிவு செய்திருக்கிறது. அதற்கான இணையதளத்தில் வருகிற ஜனவரி 18 ஆம் தேதி வரைவிண்ணப்பிக்கலாம் .

தடய அறிவியல் துறையில் உள்ள காட்சி குற்றவியல் அதிகாரி பணிக்கும் ஆள்சேர்ப்பு தேவைப்படுவதால் அந்தப் பணிக்கும் திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்.ஜனவரி 15 ஆம் தேதி வரை அதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *