இரண்டு மனைவிகளை விட்டுவிட்டு 3வதாக வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்ட தா.பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நவீன். இவர் சிறுகனூர் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2013ம் ஆண்டு ஒரு பெண்ணுடன் முறைப்படி திருமணம் நடந்துள்ளது. மனைவி, பெற்றோருடன் நவீன் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

பெண்ணை இரண்டாவதாக திருமணம் 

முதல் மனைவிக்கு தெரியாமல் அந்தப் செய்துக்கொண்டுள்ளார். அந்தப்பெண்ணை முசிறியில் உள்ள காவலர் குடியிருப்பில் தங்க வைத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இரண்டாவது மனைவியின் மூலமும் 2 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் அவர் சிறுகனூர் காவல்நிலையத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். இங்கு வந்ததும் மூன்றாவதாக ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணுடன் குடும்பம் நடத்துவதற்காக இரண்டாவது மனைவியின் வீட்டுக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அந்தப்பெண் இதுகுறித்து விசாரித்துள்ளார்.

அப்போது சிறுகனூரில் பகுதியில் ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக வீட்டுக்கு வராமல் இருப்பதும், அந்தப்பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருவதும் தெரியவந்துள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெண் ஐ.ஜி அலுவலகத்தில் நேரில் சென்று புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரிக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ஐ.ஜி.பால கிருஷ்ணன் உத்தரவிட்டனர். இந்த உத்தரவின் பேரில் காவலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் நவீன் ஏற்கெனவே இரண்டு திருமணம் செய்து இருப்பதும். மூன்றாவதாக ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து காவலர் நவீனை அதிரடியாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *