வேலூர்:
வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் பிரபல நகைக்கடையில் வைரம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தோட்டப்பாளையத்தில் 3 அடுக்குமாடிக் கொண்ட நகைக்கடையில் இரவோடு இரவாக மர்மநபர்கள் கைவரிசையை காட்டி உள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைககளின் மதிப்பு பல கோடி ரூபாய் என் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையத்தில் அமைந்துள்ளது பிரபல நகைக்கடையான ஜோஸ்ஆலுக்காஸ். இந்த நகைக்கடை 3 அடுக்குமாடிக் கொண்டதாகும். வேலூர் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் மக்கள் ஏராளமானோர் இங்கு வந்து நகைகள் வாங்குவது வழக்கம். இந்நிலையில், நேற்று இரவு நகைக்கடைக்குள் புகுந்த மர்மநபர்கள் வைரம் மற்றும் தங்க நகைககளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரதான சாலையில் உள்ள நகைக் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். தடவியல் நிபுணர்களை வரழைத்து தடங்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
+ There are no comments
Add yours