கோவை :

பள்ளி மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு அனைத்து ஜனநாயக முற்போக்கு இயக்கத்தினர் கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையை சேர்ந்த 17 வயது மாணவி, 11 ம் வகுப்பு வரை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்தார். ஆனால், அந்த ஸ்கூலில் தனக்கு படிக்க விருப்பமில்லை என்று சொன்னதால், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் அம்மணியம்மாள் என்ற பள்ளிக்கு மாறினார். அந்த பள்ளியில் 12 ம் வகுப்பு சேர்ந்து படித்து வந்தார்.

 

தற்கொலை

இந்நிலையில் நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டார்.. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள் பக்கமாக கதவை தாழ்ப்பாள் போட்டு கொண்ட மாணவி, ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்… வெளியே சென்றிருந்த பெற்றோர், வீட்டிற்கு திரும்பி வந்தபோது, கதவு உட்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது… நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால், சந்தேகமடைந்த பெற்றோர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.

போலீசில் புகார்

அப்போது, தங்கள் மகள் தூக்கில் தொங்கியதை கண்டு அலறினர்.. இது குறித்து உக்கடம் போலீசாருக்கு மாணவியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.. அந்த புகாரின் பேரில் போலீசாரும் வழக்கு பதிவு செய்து, விரைந்து வந்து மாணவியின் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. பிறகு விசாரணையையும் ஆரம்பித்தனர்.. அப்போதுதான், மாணவிக்கு பாலியல் தொல்லை இருந்து வந்தது தெரியவந்தது. ஏற்கனவே படித்த பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர், மாணவிக்கு பாலியல் தொல்லை தந்து வந்திருக்கிறா

புகார் வேண்டாம்

இதுகுறித்து வீட்டிலும் மாணவி சொல்லி கதறி அழுதுள்ளார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.. ஆனால், இந்த விஷயம் வெளியே தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டு விடும் என்பதால், அப்படியே மூடி மறைத்து விட்டதாகவும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல, பெற்றோரிடமும் இதை பற்றி வெளியே சொல்ல வேண்டாம் என்று அந்த ஸ்கூல் தலைமை ஆசிரியர் கேட்டுக் கொண்டாராம்.

பாலியல் தொல்லை

இதனாலேயே மனமுடைந்து மாணவி தற்கொலை செய்திருப்பதாக உறவினர்களும் பெற்றோர்களும் குற்றஞ்சாட்டுகின்றனர். மாணவியின் செல்போனுக்கு அடிக்கடி மெசேஜ் அனுப்பி வந்தாராம் சம்பந்தப்பட்ட ஆசிரியர்.. கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் ஒருநாள், மாணவியை ஸ்கூல் ஆடிட்டோரியத்திற்கு வரவழைத்த மிதுன் சக்கரவர்த்தி, மேல் ஆடையை கழற்றி பாலியல் தொல்லையும் அளித்துள்ளதாகவும், இது குறித்தும் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்.

உரிய விசாரணை

இந்நிலையில், தற்கொலைக்கு முன்பு மாணவி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.. அதில் “யாரையும் சும்மா விடக்கூடாது.. ரீத்தா ஓட தாத்தா, எலிசா சாரோட அப்பா, இந்த சார், யாரையும் விடக் கூடாது” என்று கைப்பட எழுதியுள்ளார்.. தங்கள் மகளுக்கு நேர்ந்த கொடுமை வேறு எந்த மாணவிக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று பெற்றோர்கள் கதறி அழுகின்றனர்.. தங்கள் மகளின் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கின்றனர்.

நீதி கேட்டு போராட்டம்

இதனிடையே பள்ளி மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு அனைத்து ஜனநாயக முற்போக்கு இயக்கத்தினர் கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் . இயற்பியல் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டை வைக்கும் நிலையில் மாணவியின் உயிர் இழப்புக்கு நீதி கேட்டு பள்ளியின் முன்புறம் அனைத்து ஜனநாயக முற்போக்கு இயக்கத்தினர் முற்றுகையில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக குறிப்பிட்ட ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *