தொடர்ந்து பேசியவர்கள் “விஜய்யின் அரசியல் வருகையால் சீமானுக்குத்தான் ஆபத்து. இளைஞர்களின் வாக்குகளை பிரிக்க இருவரும் அடித்துக் கொள்வார்கள்` என கருத்துருவாக்கம் செய்கிறது தி.மு.க அதரவு வட்டாரம். அதனை தகர்க்கவே `தம்பியும் நானும் சேர்த்து திராவிட, தேசிய கட்சிகளை காலி செய்வோம்’ என்ற வியூகத்தின் அடிப்படையில்கூட சீமான் பேச்சு இருக்கலாம்”’ என்கிறார்கள்.

இதுகுறித்து விளக்கம் கேட்க இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக்கிடம் பேசினோம் “விஜய் அரசியல் வருகையை அண்ணன் சீமான் வரவேற்று பேசுகிறாரே தவிர, விஜய்யுடன் கூட்டணி அமைக்கிறோம் என நா.த.க-வில் எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. முதலில் `தமிழக வெற்றிக் கழகம்` தனது அரசியல் நடவடிக்கைகளை தொடங்கி, நா.த.க-வின் தமிழ்தேசிய கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் கூட்டணி வைப்பது குறித்து ஆலோசிக்கலாம் என்பதைதான் அண்ணன் சீமான் சொல்லிவருகிறார். மற்றபடி விஜய் விவகாரத்தால் கட்சிக்குள் முரண் ஏற்பட்டிருக்கிறது என்பதெல்லாம் கட்டுக்கதை. அப்படியான எந்த விவாதமும் கட்சிக்குள் அரங்கேறவில்லை. நா.த.க எந்த காலத்திலும் கொள்கையில் சமரசம் செய்யாது” என்றார் உறுதியாக.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *