நாடாளுமன்றத் தேர்தல் இமாச்சல பிரதேச மாநிலம் மாண்டி தொகுதியில் பா.ஜ.க சார்பில் நடிகை கங்கனா ரனாவத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், இந்தியா டுடே பத்திரிக்கைக்கு அளித்தப் பேட்டியில்,“ராகுல் காந்தி ஒரு லட்சிய தாயின் பலி. ‘3 இடியட்ஸ்’ படத்தில் நாம் பார்த்தது போல், குழந்தைகளே பெற்றோருக்காக பலியாகிறார்கள். ராகுல் காந்திக்கும் அதே நிலைதான்.

கங்கனா ரனாவத்

ராகுலும், பிரியங்கா காந்தியும் அரசியலில் தொடர்ந்து இருக்க அவர்களின் தாய் சோனியா காந்தியால் சித்ரவதை செய்யப்படுகிறார்கள். ராகுல் காந்திக்கு ஒரு காதல் இருந்தது என்றும், ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் வதந்திகள் வந்தன. அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையை நடத்த அனுமதித்திருக்க வேண்டும். ராகுல் காந்திக்கு மிகவும் அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், மிகவும் தனிமையில் இருப்பதாகவும் நான் உணர்கிறேன்.

50 வயதுக்கு மேற்பட்டவராக ராகுல் காந்தி இருந்தாலும், ராகுல் காந்தி எப்போதும் இளைஞர் தலைவராக அறிமுகம் செய்யப்படுகிறார். ராகுல் காந்தி அரசியலைத் தவித்து வேறு எதாவது ஒன்றை செய்திருக்கலாம். ஒருவேளை அவர் நடிப்பில் முயற்சி செய்திருந்தால் ஒரு நல்ல நடிகராக மாறியிருக்கலாம். ராகுல் காந்தியின் தாய் உலகின் பணக்கார பெண்களில் ஒருவர். செல்வத்திற்கு பஞ்சமில்லை. நான் 20 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கிறேன். ஆடம்பர வாழ்க்கையை வாழ்கிறேன்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி

நான் என்னை ஒரு அரசியல்வாதியாக பார்க்கவில்லை. மக்களுக்கு சேவை செய்வதற்காக, பா.ஜ.க வேட்பாளராக மட்டுமே இருக்கிறேன். காங்கிரஸ் தலைவர் சுப்ரியாவின் சர்ச்சைக்குரிய பதிவால் வேதனை அடைந்தேன். ஆண்கள் தங்கள் தொழிலை செய்ய வெளியே செல்லும் நேரத்தில், பெண்கள் தங்களை மறைத்து, தங்கள் ஆடைகளை சரியாக அணிய வேண்டும் என்று கூறுகிறார்கள். பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற பதிவுகளை தவிர்த்திருக்கலாம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *