காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன்

காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன்

இதையடுத்தே எஸ்.டி.பி.ஐ அளித்த ஆதரவை ஏற்றுக்கொள்வதில்லை என, கேரள மாநில காங்கிரஸ் முடிவெடுத்தது. இது குறித்து கண்ணூர் வேட்பாளரும் மாநில காங்கிரஸ் தலைவருமான கே.சுதாகரன் கூறுகையில், “எஸ்.டி.பி.ஐ-க்கும், காங்கிரஸுக்கும் டீல் என்ற விபரம் எங்கிருந்து கிடைத்தது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவிக்க வேண்டும். வாயில் வந்ததை பேசுபவர்தான் முதல்வர் பினராயி விஜயன்” என கூறியிருந்தார். இந்த நிலையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஆதரவு தேவையில்லை என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பெரும்பான்மை வகுப்புவாதம் மற்றும் சிறுபான்மை வகுப்புவாதத்தையும் கேரள மாநில காங்கிரஸும், யு.டி.எஃப் கூட்டணியும் ஒன்றாக எதிர்க்கும். அப்படிப்பட்ட அமைப்புகளின் ஆதரவை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். யு.டி.எஃப் கூட்டணிக்கு இப்போது எஸ்.டி.பி.ஐ வழங்கிய ஆதரவை அது போன்றுதான் நாங்கள் பார்க்கிறோம். அவர்களது ஆதரவை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். வாக்களிப்பது தனிப்பட்ட மனிதர்களின் விருப்பம். எல்லா மக்களும் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்” என்றார். காங்கிரஸின் இந்த முடிவைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிக்க உள்ளதாக எஸ்.டி.பி.ஐ தெரிவித்துள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *