பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் மோடிக்கு பாஜக மகளிர் அணியினர் பாராட்டு தெரிவித்தனர்.

மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் கடந்த புதன்கிழமையும் ( செப்.20) மாநிலங்களவையில் வியாழக்கிழமையும் ( செப்.21) நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் மசோதா மீது நடைபெற்ற மிக நீண்ட விவாத்திற்கு பின்னர் வாக்கெடுப்பு நடைபெற்றது. அவையில் இருந்த 214 பேரும் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஒரு உறுப்பினர் கூட மசோதாவை எதிர்த்து வாக்களிக்கவில்லை.மகளிர் மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் பெண் எம்பிக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடிக்கு அவர்கள் இனிப்பு வழங்கி நன்றி தெரிவித்தனர்.

இந்த நிலையில், பாஜக மகளிர் அணி சார்பில் பிரதமர் மோடிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதற்காக, டெல்லி பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்த பிரதமர் மோடிக்கு அக்கட்சியின் மகளிர் அணி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கூடியிருந்த மகளிர் அனைவரும் பிரதமர் மோடியை வாழ்த்தி  முழக்கங்கள் எழுப்பினர்.

காலில் விழுந்த வானதி: 

அப்போது பிரதமருக்குப் பூங்கொத்து கொடுத்த  வானதி சீனிவாசன், அவரது காலில் விழுந்து ஆசி பெற முயன்றார். இதனால் அதிருப்தி அடைந்த பிரதமர் மோடி, சட்டென்று பின் நகர்ந்தார். அவ்வாறு காலில் விழக் கூடாது என செல்லமாக கண்டித்தார். அதன்பின் மேடைக்கு வந்த பிரதமருக்கு பெண்கள் ஆளுயர மாலை அணிவித்து காலில் விழுந்து வணங்கினர். பதிலுக்கு பிரதமர் மோடியும் அவர்களது காலில் விழுந்து ஆசி பெற்றார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *