விவசாயிகளுக்கான கடன் அட்டை(KCC)திட்டம் மற்றும், வானிலை குறித்த தகவல்கள் உள்ளிட்டவற்றை விவசாயிகள் நேரடியாக தெரிந்து  பயன் பெறும் வகையில் பிரத்யேக கிசான் ரின் என்ற இணைய சேவையை இன்று அறிமுகம் செய்கிறது மத்திய அரசு.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் கிசான் ரின் போர்ட்டலை இன்று தொடங்கி வைக்கின்றனர்.  இந்த போர்டல் மூலம் விவசாயிகள் மானிய விலையில் கடன் பெறலாம். கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் இந்த நன்மையைப் பெறுவார்கள். மேலும், வீட்டுக்கு வீடு கிசான் கிரெடிட் கார்டு திட்டம் தொடங்கப்படும். தவிர, வானிலை தகவல் நெட்வொர்க் டேட்டா சிஸ்டம்ஸ் (WINDS) போர்ட்டலும் கிடைக்கும். கிசான் ரின் டிஜிட்டல் தளம் மூலம் விவசாயிகள் பல்வேறு விரிவான தகவல்களைப் பெற முடியும் என வேளாண் அமைச்சர் தோமர் தெரிவித்துள்ளார். விவசாயக் கடன் தொடர்பான விபரங்கள், வட்டி குறைப்பு, விவசாயிகளுக்கான திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு, வங்கிகளின் ஒருங்கிணைப்பு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் விவசாயக்கடன் எளிதாக கிடைக்கும்.

மார்ச் 30 ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் சுமார் 7.35 கோடி KCC கணக்குகள் உள்ளன. அவர்களுக்கு 8.85 லட்சம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ தரவுகளின்படி.. விவசாயக் கிரெடிட்டின் கீழ் அரசு மானிய வட்டி விகிதம் ரூ. 6,573 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அளவிற்கு கடன்கள் ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் காலாண்டில் வழங்கப்பட்டுள்ளன. KCC பலன்களை மேலும் விரிவுபடுத்துவதற்காக வீடு வீடாக பிரச்சாரம் செய்யும் திட்டம் கொண்டு வரப்படும் என்றும், இதனால் விவசாயிகளுக்கான கிரெடிட் கார்டு இல்லாதவர்களுக்கு சேவைகள் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் கிசான் திட்டத்தில் இணைந்த அனைவருக்கும் கேசிசி கடன் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரியவந்துள்ளது.

கேசிசி ஸ்கீம்

மத்திய அரசின் பிரதமர் கிசான் திட்டம் ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம் வழங்கி வருவது நாம் அறிந்ததே.. பயனாயாளர்களின் வங்கிக் கணக்கில் ஏற்கனவே 14 தவணைகள் செலுத்தப்பட்டுள்ளன. தற்போது 15வது தவணை வழங்கப்பட உள்ளது, இந்த நிதி விரைவில் கிடைக்கும் என தெரிகிறது. இந்தத் தொகையை மத்திய அரசு எதிர் வரும் பண்டிகைக் காலத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் மாதத்தில் அரிசி பெறுஞம் பயனாளர்களிடம் பணம் பெறப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இது பலருக்கும் மகிழ்ச்சியளிக்க கூடிய விசயம். ஆனால், 15 ஆவது தவணை தொகை வழங்கப்படுவது எப்போது என்பது குறித்து மத்திய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *