இதையடுத்து, ராணுவ அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக லீ ஷாங்பு தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. கடைசியாக அவர் ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதியன்று ஆப்ரிக்க நாடுகளுடனான பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் உரையாற்றியிருந்தார். இதனிடையே, லீ ஷாங்பு விசாரணைக்கு உட்பட்டிருக்கலாம் என அமெரிக்க அரசு நம்புகிறது என, ஆங்கிய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஏற்கெனவே, இதேபோலத் தான் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த கின் காங் (Qin Kong) தொடர்ந்து சில வாரங்களாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். அதற்கான விளக்கமும் அளிக்கப்பட வில்லை. அதைத் தொடர்ந்து கின் காங் பதவியிலிருந்து அகற்றப் பட்டு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாயின. பின்னர் கின் காங்குக்கு பதிலாக கம்யூனிஸ்ட் கட்சியின் வெளிவிவகார ஆணையத்தின் இயக்குநராக இருந்த வாங் யீ (Wang Yi) வெளியுறவுத்துறை அமைச்சராக்கப்பட்டார். இந்த நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் லீ ஷாங்ஃபும் சில வாரங்களாக பொது நிகழ்ச்சிகளில் தோன்றாமல் இருப்பது அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY