உலகின் வளர்ந்து வரும் தலைவர்கள் 100 பேர் பட்டியலில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு இடம் அளித்து பிரபல டைம் இதழ் கௌரவப்படுத்தியுள்ளது. இந்த பட்டியலில் ஹர்மன்ப்ரீத்தை தவிர்த்து மேலும் 2 இந்தியர்கள் வளர்ந்து வரும் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உடல்நலம், பருவநிலை மாற்றம், வர்த்தகம், விளையாட்டு, கலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆளுமை மிக்கவர்களாக திகழும் உலகின் 100 பேரை டைம் இதழ் தேர்வு செய்து, அவர்களை வளர்ந்து வரும் தலைவர்கள் என்று கௌரவித்துள்ளது.

இந்த பட்டியலில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இடம் பெற்றுள்ளார். அவரது சாதனைகளை குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்துள்ள டைம் இதழ், உலகில் மதிப்புமிக்க விளையாட்டுகளில் ஒன்றான கிரிக்கெட்டில், பெண்களின் பங்களிப்பை ஹர்மன்ப்ரீத் முக்கியத்துவப்படுத்தி உள்ளார் என்று கூறியுள்ளது. 2017 இல் நடந்த உலகக்கோப்பை தொடரின் போது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மேட்ச்சில் ஹர்மன் பிரீத் 115 பந்துகளில் 171 ரன்கள் குவித்து உலகிற்கு தனது திறமையை வெளிப்படுத்தியதாக டைம் இதழ் பாராட்டி உள்ளது.

அதன் பின்னர் தொடர்ந்து 6 ஆண்டுகளாக ஹர்மன்ப்ரீத் கவுர் தலைப்புச் செய்திகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்றும் டைம் இதழ் கூறியுள்ளது. சமீபத்தில் வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற்ற தொடரில் நடுவர்களின் தீர்ப்பை ஹர்மன்ப்ரீத் வெளிப்படைய விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இதற்காக அவருக்கு போட்டி கட்டணத்தில் 75 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. இதனையும் குறிப்பிட டைம் இதழ் மறக்கவில்லை.

இதையும் படிங்க – உலகின் சக்திவாய்ந்த தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் .. எவ்வளவு ஆதரவு தெரியுமா?

ஆளுமை காரணமாக அவரை உலகில் வளர்ந்து வரும் 100 தலைவர்களில் ஒருவராக குறிப்பிட்டுள்ளது. இதேபோன்று காசநோய் பாதிப்பில் இருந்து மன வலிமையால் மீண்ட நந்திதா வெங்கடேசன், வால் மேக்கர் நிறுவனத்தை ஏற்படுத்திய வினோ டேனியல் ஆகிய 2 இந்தியர்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க – கொரோனாவை விட நிபா வைரஸால் பாதிக்கப்பட்டோர் உயிரிழக்கும் அபாயம் அதிகம் என எச்சரிக்கை

இந்த வால் மேக்கர்ஸ் நிறுவனம் சகதி மற்றும் கழிவு பொருட்களை கட்டிடங்கள் கட்டுவதற்கு உபகரணங்களாக பயன்படுத்தி சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. வினு டேனியலை பாராட்டியுள்ள டைம் இதழ், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை வினு டேனியல் செய்து கொண்டிருக்கிறார். இதன் மூலமாக குறைந்தது ஒரு சிமெண்ட் மூட்டையை பயன்படுத்துவதை குறைக்க முடியும். அல்லது ஒரு மரத்தை வீணாக்குவதை தடுக்க முடியும் என்று கூறியுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *