அருவியில் ஆட்டம் போட்டு குளிப்பதற்கு யாருக்குத்தான் பிடிக்காது. எப்போ பார்த்தாலும் படிப்பது, வேலை செய்வது என்று இயந்திரம் மாதிரி சென்று கொண்டிருக்கும் நமது வாழ்க்கையில் அவ்வப்போது இயற்கையை ரசிக்கும் வண்ணம் சுற்றுலா தளங்களுக்கு செல்வது நம் மனதிற்கு அமைதியை தருவதோடு, மீண்டும் நமது வழக்கமான வேலையை இன்னும் புத்துணர்ச்சியோடு தொடங்குவதற்கு உதவும்.

அந்த வகையில் பெரும்பாலான நபர்கள் விடுமுறையின் போது செல்லக்கூடிய ஒரு அட்டகாசமான சுற்றுலாத்தளமான அருவிக்குழி நீர்வீழ்ச்சி பற்றி தெரிந்துகொள்வோம். இந்த அருவி கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கண்ணுக்கு இனிமையான, மனதிற்கு நிறைவு தரக்கூடிய இடத்தை பற்றிய சில தகவல்களை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

கோட்டயம் பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்களது வார இறுதி நாட்களை அருவிக்குழி நீர்வீழ்ச்சியில் மகிழ்ச்சியோடு செலவழிக்கின்றனர். 100 அடி உயரத்திலிருந்து விழுகின்ற அருவியை சுற்றி ரப்பர் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அனைவரையும் வசீகரப்படுத்தும் இங்கு இருக்கக்கூடிய குளுமையான சூழலும், இதமான காற்றும் இந்த இடத்தின் சிறந்த பகுதிகளாகும். இந்த இடத்தை பார்வையிடுவதற்கு ஒரு நபருக்கு ரூபாய் 26 என்ற கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நீர்வீழ்ச்சியின் உச்சியில் செயின்ட் மேரிஸ் சர்ச் அமைந்துள்ளது. இங்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்தையும் பார்வையிட்டு செல்வது வழக்கம்.

இந்த நீர்வீழ்ச்சியின் வரலாறு பற்றி பேசுகையில், செயின்ட் மேரிஸ் சர்ச்சில் வழிபாடு செய்த பிரிட்டிஷ்காரர்கள் இந்த இடத்தை அவர்களது மலைப்பிரதேசமாக மாற்றிக் கொண்டனர். இந்த சர்ச்சானது நீர்வீழ்ச்சிக்கு ஒருவித தெய்வீகத் தன்மையை கொடுக்கிறது என்பது நம்பிக்கை. இந்த சர்ச் லூர்து மாதா கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த நீர்வீச்சியில் விழுகின்ற தண்ணீருக்கு ஆற்றும் சக்திகள் இருப்பதாகவும், தங்களது கஷ்ட காலங்களில் இங்கு வந்து குளித்தால் கஷ்டங்கள் தீரும் என்பதும் அங்குள்ள உள்ளூர்வாசிகளின் நம்பிக்கையாக உள்ளது. இங்கு வரக்கூடிய நபர்கள் பல்வேறு இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து வருகின்ற பறவைகளையும் கண்டு களிக்கலாம்.

மழைக்காலமான ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நினைத்துப் பார்க்காத அளவிற்கு இந்த நீர்வீழ்ச்சியில் உள்ள நீரின் அளவு பல மடங்கு அதிகரிக்கும். இதன் மூலமாக இது ஒரு இயற்கை தளம் என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது. இந்த நீர்வீழ்ச்சி தீவுக்கூட்டங்களுக்கு பெயர் போன குமரகம் பகுதியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மாதா கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பாலிகாதோட் என்ற மார்கெட் அமைந்துள்ளது. மற்றும் ரப்பர் தோட்டம் உள்ளது.

சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்ட நெல்லை போலீசார்!

அருவிக்குழி நீர்வீழ்ச்சியை அடைய கொச்சியில் அமைந்துள்ள சர்வதேச ஏர்போர்ட்டில் இருந்து சாலை வழியாக 100 கிலோமீட்டர் பயணம் செல்ல வேண்டும். ஏர்போர்ட்டில் இருந்து நீர்வீழ்ச்சிக்கு செல்வதற்கு பிரைவேட் டாக்ஸிகள் கிடைக்கிறது.

குமரகத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கோட்டயம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ரயில் மூலமாகவும் பயணிக்கலாம். குமரகம் கிராமத்திற்கு அரசு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. குமரகத்தில் இருந்து 2 கிலோமீட்டர் நடைபயணமாக நீர்வீழ்ச்சியை சென்றடையலாம்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *