பணமோசடி புகாரில் மகாதேவ் ஆன்லைன் ஆப் நிறுவனர்களில் ஒருவரான சவுரப் சந்திர சேகருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு ரூ. 417 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ளனர். சூதாட்ட ஆப் நிறுவனர்களில் ஒருவரான சவுரப் சந்திர சேகர் தனது திருமணத்திற்கு ரூ. 200 கோடியை செலவழித்துள்ளார் என்று அமலாக்கத்துறை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது..

துபாயில் நடந்த இந்த திருமணத்திற்கு தனி விமானத்தின் மூலம் பாலிவுட் நடிகர்கள் வரவழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சவுரப்பின் மகாதேவ் ஆன்லைன் ஆப் மூலம் நடந்த பண மோசடி குறித்து விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவர் மீது வழக்குப்பதிவு செய்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியிட்டுள்ளனர்.

மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட ஆப் மூலம் ரூ. 5 ஆயிரம் கோடி அளவுக்கு பண மோசடி நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பெற்ற பணத்தை கொண்டு ஆப் நிறுவனர்களான சவுரப் சந்திரசேகர் மற்றும் ரவி உப்பால் ஆகியோர் துபாயில் சொத்துக்களை வாங்கி குவித்து மன்னர்களைப் போல் வாழ்ந்து வந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது கடந்த பிப்ரவரி மாதம் சவுரப் சந்திரசேகருக்கு திருமணம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பாலிவுட்டை சேர்ந்த சில நட்சத்திரங்கள் தனி விமானத்தின் மூலம் வரவழைக்கப்பட்டனர் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த திருமணத்திற்கு மட்டும் சந்திரசேகர் 200 கோடி ரூபாய் வரை செலவிட்டுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. இதற்காக நாக்பூரில் இருந்து சவுரபின் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்டோர் தனி விமானத்தில் வரவழைக்கப்பட்டு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஓட்டல் செலவு மட்டும் ரூ 42 கோடி இருக்கும் என்று அமலாக்கத்துறை மதிப்பிட்டுள்ளது. செலவு அனைத்துமே ரொக்கப் பணமாக அளிக்கப்பட்டுள்ளது என்று அமலாக்கத்துறை கூறியுள்ளது. இந்த திருமணத்தில் பாலிவுட் திரையுலகில் இருந்து டைகர் ஷெரோப், சன்னி லியோன், நுஸ்ரத் பருச்சா உள்ளிட்டோர் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

திருமணத்தை நடத்திய ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்திற்கு சந்திரசேகர் ஹவாலா முறையில் ரூ. 112 கோடி அளித்துள்ளதாக வருமான வரி அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க – மிரட்டும் வங்கதேச திரிபு நிபா வைரஸ்.. பாதிக்கப்பட்ட 10-ல் 9 பேர் உயிரிழப்பு?! இந்தியாவுக்கு சுகாதார வல்லுனர்கள் எச்சரிக்கை

மகாதேவ் ஆன்லைன் பெட்டிங் சூதாட்ட வழக்குடன் தொடர்புடையதாக சந்திரசேகருக்கு சொந்தமான 417 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. மகாதேவ் ஆன்லைன் ஆப்பை உருவாக்கிய சவுரவ் சந்திரசேகர் மற்றும் ரவி உப்பால் ஆகியோர் சட்டிஸ்கர் மாநிலம் பிலாயை சேர்ந்தவர்கள்.

சந்திர சேகர் – ரவி உப்பால்

இந்த ஆப் சட்டவிரோத சூதாட்ட இணையதளங்களை ஆன்லைன் தளத்தில் பயன்படுத்த தேவையான உதவிகளை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க – அரக்கன் வேஷத்தில் குழந்தைகளுக்கு உதவும் நபர்!

தற்போது கொல்கத்தா, போபால், மும்பை உள்ளிட்ட நகரங்களில் சந்திரசேகருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி ரொக்க பணம், தங்க நகைகள், தங்க கட்டிகள் உள்ளிட்டரூ. 417 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளனர். அது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *