சேலம்:

சேலம் புதிய பஸ் நிலையம் அருகே கடந்த 17-ந் தேதி சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அந்த பகுதியினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் பலனின்றி, 18-ந் மாலை இறந்து போனார்.

உயிரிழந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதேபோல், சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் கடந்த 2-ந் தேதி சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், வயிற்று வலியால் திடீரென மயங்கி விழுந்தார். அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த 9-ந் தேதி, அந்த நபர் உயிரிழந்தார்.

அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து விபரம் தெரியவில்லை. இதுகுறித்த புகார்களின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *